தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
1) |
சிறுகதையின்
கருப்பொருள் எங்ஙனம் அமைய
வேண்டும்? |
சிறுகதையின்
கருப்பொருள் எளிமையானதாய்
அமைய வேண்டும். அது மக்களின் நம்பிக்கையை
உயர்த்த வேண்டும். சமுதாயத் தேவைகளைச்
சுட்டுதல் வேண்டும். வாழ்க்கையின் நன்மை,
தீமைகளை எடுத்துக்கூற வேண்டும். அறத்தினை
வலியுறுத்த வேண்டும்.
பொழுதுபோக்கு
எல்லையைத் தாண்டி மக்களுக்குப் பயன்பட
வேண்டும். |