2.6 தொகுப்புரை
இதுவரை ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிடுவதற்கு முன்பு துணை ஆசிரியர் செய்ய வேண்டிய செம்மையாக்கப் பணிகளைக் கண்டோம். இவ்வளவு பொறுப்புகள் மிகுந்த துணையாசிரியர் ஒரு பத்திரிகையின் முதுகெலும்பாவார். இத்துணைப் பணிகளைச் செய்தாலும் வெளி உலகிற்கு அறிமுகமாகாமல் பணியாற்றிக் கொண்டிருப்பவர் பத்திரிகையின் துணையாசிரியரே என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
செம்மையாக்கம் செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை: செம்மையாக்க வகைகள், அச்சுக்குப் போகும் முன்பு மிகவும் கவனமாகப் பரிசோதிக்க வேண்டியவை எல்லாம் ஒரு பத்திரிகையின் பெருமையை வெளி உலகிற்குத் தெரிவித்து, விற்பனையைக் கூட்டும்; தரத்தையும் உயர்த்திப் பத்திரிகையின் வளர்ச்சிக்கு வலிமையூட்டும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
சிறப்புக் கூறுகள், கட்டுரைகள் ஆகியவற்றை யார் யார் எழுதுகின்றனர்? |
விடை |
2. |
பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் செம்மையாக்கக் குறியீடுகளைக் கூறுக.
|
விடை
|
|
|