4.4 தொகுப்புரை

இதழ் வெளியீட்டில் புதுதில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் இந்திய அளவில் முன்னணியில் உள்ளன. இதழ்களைச் செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் என்று பொதுவாக வகைப்படுத்தலாம். வாசகர்கள் எப்படிப்பட்ட செய்திகளை விரும்புகிறார்களோ அப்படிப்பட்ட செய்திகளையே இதழ்கள் வெளியிட வேண்டும். மேலை நாடுகளைப் போன்றே நம் நாட்டிலும் புலனாய்வு இதழ்கள் தற்போது வெளியிடப்படுகின்றன. சில இதழ்கள் விற்பனையைப் பெருக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் பாலுணர்வுச் செய்திகளையும் படங்களையும் வெளியிடுகின்றன. பொருளாதார நிலை தாழ்ந்தாலும் கொள்கை இதழ்கள் தங்களின் கொள்கையிலிருந்து தவறுவதில்லை.

தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கிணங்கச் செய்திகளை வெளியிடக் கூடாது. ஒற்றுப் பிழைகளைத் தமிழ் இதழ்கள் கண்டு கொள்வதில்லை. தற்கால நாளிதழ்களில் ஒன்பது வகையான செம்மையாக்கக் குறியீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

ஆச்சரியக்குறி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

விடை
2.

அரைப்புள்ளியின் பயன்பாடு என்ன?

விடை
3.

இரட்டை மேற்கோள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

விடை