பாடம் - 6

A06126 இக்கால ஓவியங்களும், சிற்பங்களும்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

நாயக்கர் காலத்திற்குப் பின் தொடர்ந்து வந்த மரபு
சார்ந்த சிற்ப, ஓவியக் கலைகள், தற்காலத்தில்
பெற்றுள்ள புதிய உருவங்களையும் உள்ளடக்கங்களையும்
விளக்குகிறது. மேற்கத்தியக் கலைத் தாக்கத்தினால்
நவீனக் கலையை வளர்த்து வரும் சிற்பிகள், அவர்கள்
படைத்த நவீனச் சிற்பங்கள், ஓவியர்கள், அவர்கள்
படைத்த நவீன ஓவியங்கள் பற்றிய செய்திகளைத்
தருகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மரபுக் கலைக்கும் நவீனக் கலைக்கும் உள்ள
    வேறுபாடுகளை அறியலாம்.
  • தஞ்சை ஓவியம், தஞ்சைக் கலைப் பொருள்கள்
    ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • நவீனச் சிற்பங்களைப் படைத்து வரும் சிற்பிகள்
    சிலரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • நவீனச் சிற்பங்களில் நாட்டுப்புறக் கலைகளின்
    தாக்கம் பற்றியும், மரபின் தாக்கம் பற்றியும்,
    இக்காலச் சமூகச் சூழலின் செல்வாக்குப் பற்றியும்
    அறிந்து கொள்ளலாம்.
  • நவீன ஓவியக் கலைஞர்கள் சிலரைப் பற்றித்
    தெரிந்து கொள்ளலாம்.
  • இக்கால ஓவியங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு