நாட்டுப்புறக்
கைவினைக் கலைகள், கலைப் பொருட்கள் குறித்துக்
கற்று அறிந்திருப்பீர்கள்
என்று நம்புகிறேன். ஆமாம்தானே!
நாட்டுப் புறங்களில் இத்தகைய கைவினைக் கலைகளும் கலைப்
பொருட்களும் உள்ளனவா என்று வியந்து போயிருப்பீர்கள். அவை
தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் இரண்டறக் கலந்துள்ள
உறவு கண்டு பூரித்துப் போயிருப்பீர்கள். இதுதான் நாகரிகக்
கலைப் பொருட்களுக்கும் நாட்டுப்புறக் கைவினைக் கலைப்
பொருட்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எளிதில் கிடைக்கும்
மூலப் பொருட்கள், மலிவான விலை, குறைவான உற்பத்திச் செலவு,
வீட்டிலேயே தொழில் கூடம், நிறைவான வருமானம் இவை கைவினைக்
கலைகளின் சிறப்புக் கூறுகளாகும்.
|