| 5.6
கல்லாதவர் ஆயினும் கற்றவர் சொல் கேட்டு அறிக |
E |
|
|
கல்வியின்
சிறப்பையும், கற்றவரின் பெருமையையும், கல்வியின்
பயனையும், கல்லாதவரின் இழி நிலையையும்
குறிப்பிட்டு,
கல்வியைக் கற்க வற்புறுத்திய வள்ளுவர், கல்வியைப் போன்று,
கற்ற அறிஞர்களின் உரையைக் கேட்டலும் சிறப்புடையது
என்கிறார். ஏன் என்றால், கல்வியைப் போன்று, கேள்வி அறிவும்
ஒரு செல்வமே என்கிறார். அதிலும், செல்வங்களில் எல்லாம்
சிறந்த செல்வம் கேள்விச் செல்வம் என்கிறார் வள்ளுவர்.
|
|
சாக்ரட்டசின் கருத்துகளைத் தம் காதுகளால்
கேட்டு விழிப்பு உணர்ச்சி பெற்ற ஏதன்ஸ்
நகர மக்களால், கிரேக்கத்தில் மாறுதல்
ஏற்பட்டது என்பர். எழுத்துகள் ஏட்டில்
இடம் பெறாத காலக்
கட்டத்தில், எழுதப்
படிக்கத் தெரியாதவர்கள் மிகுந்து இருந்த
காலக்கட்டத்தில், சீன
அறிஞர்
|
|
|
|
கன்பியூசியஸின்
(Confucius) கருத்துகள், அருட்செல்வர்
புத்தரின் கருத்துகள் எவ்வாறு பரவின? மக்களின்
செவிச்
செல்வத்தால். எனவே தான் வள்ளுவர்
|
| |
|
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம்
|

|
| செல்வத்துள்
எல்லாம் தலை. |
(குறள்
எண்: 411)
|
|
|
|
என்று குறிப்பிடுகிறார்.
|
|
செவியால் கேட்டறிவதைச்
செல்வம்
என்றமையால், கல்லாதவன்
செவிச்
செல்வத்தையாவது நாடி ஏற்க வேண்டும்.
நூல்களைக் கற்க இயலாவிட்டாலும், கற்று
அறிந்தவர்களிடம், கேட்டு அறிய வேண்டும்.
அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி
வரும்போது, ஊன்றுகோலாக அமையும்
என்கிறார் வள்ளுவர்.
|
|
|
| |
|
கற்றிலன்
ஆயினும்கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
|

(குறள் எண்: 414)
|
|
|
(ஒற்கத்தின் = தளர்ச்சி வந்த பொழுது;
ஊற்றாம் துணை = ஊன்றுகோலாகத் துணை செய்யும்)
|
5:6:1
காது இருந்தும் செவிடர்களே! |
|
மேலும்,
கேள்வி அறிவால், துளைக்கப்படாத
செவிகள்,
இயற்கையான துளைகளைக் கொண்டு ஓசையைக்
கேட்டு
அறிந்தாலும், அவை களோத செவிட்டுத் தன்மையை உடையன
என்று குறிப்பிடுகிறார்.
|
|
கேட்பினும்
களோத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
|

(குறள்
எண்: 418)
|
|
|
(கேள்வியால் = கேட்டு அறிதலால்;
தோட்கப்படாத = துளைக்கப்படாத)
கல்வி
எனும் கண் இல்லாதவன், முகத்தில் புண் உடையவனாகக்
கருதப்படும் என்று கூறிய வள்ளுவர், செவியால்
நல்ல
அறிஞர்கள் கருத்தைக் கேட்காத -
கேட்க விரும்பாத
ஒருவன் காதுகள், இருப்பதும் ஒன்றுதான்,
இல்லாததும்
ஒன்றுதான். ஏன் என்றால் அவை, காது களோத செவிட்டுத்
தன்மை கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறார்.
|