3.4 போரும் விளைவும்
ஆநிரையை
மீட்பதற்காகப் போர் தொடங்குகிறது. போர்
என்றாலே வெட்டும் குத்தும் மரணமும் ஏற்படுமல்லவா? அவற்றை
விளக்குகின்றன பின்வரும் துறைகள்.
3.4.1 போர் மலைதல்
போர் - நிரை மீட்சிப் போர்; மலைதல் -போரிடல். பசுவினம்
சென்ற அடிச்சுவட்டின் மேல் தொடர்ந்து சென்ற கரந்தையார்
அவற்றை மீட்க வேண்டி மலைவது ஆதலின் போர் மலைதல்
எனப் பெற்றது.
ஆரவாரத்தோடும்
மின்னும் வேற்படைகெளாடும் சென்ற
கரந்தை மறவர்கள் வெட்சியாரைக் கண்டனர்; மேற்கொண்டு
செல்லா வண்ணம் அவர்களைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர்;
அச்சம் தோன்றும்படியாகத் தாக்கினர்; அதில் ஒரு சமயம்
கரந்தையார்
ஓங்கினர்; வெட்சியார் தாழ்ந்தனர்,
மற்றொரு சமயம்
வெட்சியார் ஓங்கினர்;
கரந்தையார் தாழ்ந்தனர். இவ்வாறு
நிகழ்த்திய உறழ் போரைப் (மாறி மாறி வரும்) பற்றியது போர்
மலைதல் என்னும் துறையாம்.
வெட்சி
யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உறழ்செருப் புரிந்தன்று. |
(உட்கு
= அச்சம்)
3.4.2 புண்ணொடு வருதல்
வேந்தனுடைய மனம் எப்போதும் வெற்றியையே நினைக்கும்.
வேந்தன் மனம் மகிழ ஆநிரையை மீட்கும் போரில் கரந்தை
மறவன் புண்பட்டு
வெற்றியுடன் வருவதனைக் கூறுவதால்
புண்ணொடு வருதல் என்னும் பெயராயிற்று.
- கொளுவின்
பொருளும் கொளுவும்
உலகம் உள்ளளவும் தன்னுடைய புகழை நிலைக்கச் செய்து, மறவன் ஒருவன் கரந்தைப் போரில் தன்னுடல் அழிதற்குக் காரணமான விழுப்புண்ணை ஏற்று வெற்றியுடன் வந்தது புண்ணோடு வருதல்
எனும் துறையாம்.
மண்ணோடு
புகழ்நிறீஇப்
புண்ணொடு தான்வந்தன்று |
3.4.3
போர்க்களத்து ஒழிதல்
போர்க்களத்து + ஒழிதல் = போர்க்களத்தின்கண்
இறந்து
போதல். ஆநிரை மீட்சிப் போரில் ஈடுபட்ட கரந்தை மறவன்
ஒருவன் போர்க்களத்தில் இறந்துபட்டதைக் கூறுவதால் இத்துறை,
போர்க்களத்து ஒழிதல் என்னும் பெயர் உடையதாயிற்று.
வெட்சி
மறவர்களோடு கரந்தை மறவன் ஒருவன்
அயர்வின்றி இறுதி வரையும் எதிர்நின்று போரிட்டான்;
அப்போர்க்களத்திலேயே இறந்து பட்டான். இறந்து பட்டமையை
இயம்புவது போர்க்களத்து
ஒழிதல்
என்னும் துறையாம்.
படைக்குஓடா விறல்மறவரைக்
கடைக்கொண்டு களத்தொழிந்தன்று |
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1. |
ஆநிரை
மீட்பில் மறவர் சூடும் பூ யாது? |
|
2. |
சேர,
சோழ, பாண்டியர்களுக்குரிய குலப்பூக்கள்
யாவை? |
|
3. |
கரந்தைத்
திணையின் துறைகள் எத்தனை? |
|
4. |
‘அதரிடைச்
செலவு’ - விளக்குக. |
|
5.
|
போர்
மலைதல் எதனைக் குறிக்கும்? |
|
|