6.2 தொடை விகற்பங்கள்

மேலே, சீர்கள் நான்களால் இயன்ற அளவடிகளில் உள்ள
சீர்களில் முற்றுமாக, சிலசீர்களிலுமாக ஒன்றிவரும் தொடைகளின்
விகற்பங்கள் இணை முதலான ஏழு என்பதை இதுவரை
பார்த்தோம். ஒவ்வொரு வகையிலும் மோனை, இயைபு, எதுகை,
முரண், அளபெடை என்னும் தொடைகள் ஐந்தும் வருமல்லவா?
வரும். வர, அவை ஒவ்வொன்றனொடும் ஒவ்வொரு வகை என
உறழ (5X7), முப்பத்தைந்து தொடை விகற்பங்கள் என விரியும்.

6.2.1 மோனைத் தொடை விகற்பங்கள்

மோனைத் தொடை விகற்பங்கள் ஏழு. அவை இணைமோனை,
பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை,
மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை
என்பனவாம்.

  • இணை மோனை

(காட்டு), ணிமலர் சோகின் தளிர்நலம் கவற்றி

         (1)     (2)     (3)     (4)

1,2 சீர்களில் இணைந்து முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை
வந்துள்ளது. 3,4 சீர்களில் இத்தகைய ஒன்றுதல் இல்லை. எனவே,
இணைமோனை.

  • பொழிப்பு மோனை

(காட்டு) ரிக்குரல் கிண்கிணி ரற்றும் சீறடி”

         (1)     (2)     (3) (4)

1,3 சீர்களில் சிறப்பாக (பொழிப்பாடாக) முதலெழுத்து
ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. 2,4 சீர்களில் (அஃதாவது
ஒன்றை விட்டு ஒரு சீர்களில்) இத்தகைய ஒன்றுதல் இல்லை.
எனவே, பொழிப்பு மோனை.

  • ஒரூஉ மோனை

(காட்டு) ம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் கற்றி

         (1)     (2)     (3)     (4)

1,4 சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது.
2,3 ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரவில்லை. ஒருவி
வந்துள்ளது. (ஒருவுதல்-நீங்குகை.) எனவே, ஒரூஉமோனை.

  • கூழை மோனை

(காட்டு) கன்ற ல்குல்’ ந்நுண் மருங்குதல்

         (1)     (2)     (3)     (4)

1,2,3 ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை
வந்துள்ளது. கூழை (இறுதி)ச் சீராகிய 4ஆம் முதலெழுத்து ஒன்றி
வரவில்லை. எனவே கூழைமோனை.

  • மேற்கதுவாய் மோனை

(காட்டு) ரும்பிய கொங்கை வ்வளை மைத்தோள்’

         (1)     (2)     (3)     (4)

1,3,4ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை
வந்துள்ளது. 2 ஆம் சீரில் முதல் எழுத்து ஒன்றி வரவில்லை.
(மேற்கதுவாய் - மேற்பகுதியில் கதுவி இருத்தல்) எனவே,
மேற்கதுவாய் மோனை.

  • கீழ்க்கதுவாய் மோனை

(காட்டு) விர்மதி னைய திருநுதல் ரிவை’

         (1)     (2)     (3)     (4)

1,2,4 ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை
வந்துள்ளது. 3-ஆம் சீரில் முதல் எழுத்துப் பொருந்தி வரவில்லை.
3,4 ஆம் 1,2 ஆம் சீர்களிலேயே செறிவு காணப்படுகிறது. எனவே,
கீழ்க்கதுவாய் மோனை.

  • முற்று மோனை

(காட்டு) யில்வேல் னுக்கி ம்பலைத்து மர்ந்த’

         (1)     (2)     (3)     (4)

1,2,3,4 ஆம் சீர்களில் அஃதாவது சொல்லப்பட்ட நான்கு
சீர்களிலும் மோனை வரத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆதலின்
முற்றுமோனைத் தொடையாம்.

இம்மோனை விகற்பங்கள் ஏழும் வந்த செய்யுளை இணைத்துப்
காண்போம்.

அதுவருமாறு:

     அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி
     அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி
     அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி
     அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
     அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்
     அவிர்மதி அனைய திருநுதல் அரிவை
     அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த
     கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என்
     திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே”

6.2.2 இயைபுத் தொடை விகற்பங்கள்

செய்யுளின் அடிகள் தோறும் இறுதி எழுத்து, அசை, சொல்
ஆகியன இயைந்து வருமாறு தொடுப்பது அடியியைபுத் தொடை
என்றால், ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின
ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபுத் தொடை.
இயைபுத் தொடை விகற்பங்கள் ஏழு. அவையாவன: இணை
இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு,
மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்றியைபு.

  • இணை இயைபு (1,2 ஆம் சீர்களில் இயைபு)

(காட்டு) ‘மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

         (4)     (3)     (2)     (1)

இஃது அளவடி. இந்த அளவடிக்குள் நான்கு சீர்கள் உள்ளன.
நான்கு சீர்களுள் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ‘லே’ இயைந்து
வந்துள்ளதால் சீர்இயைபு. 3,4 ஆம் சீர்களில் இயைபு இல்லை.

  • பொழிப்பு இயைபு (1,3 சீர்களில் இயைபு)

(காட்டு) ‘மற்றதன் அயலே முத்துறழ் மணலே

         (4)     (3)     (2)     (1)

இதன்கண் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து
ஒன்றி வந்துள்ளது. இரண்டாம் நான்காம் சீரில் இத்தகைய இயைபு
இல்லை. எனவே, பொழிப்பு இயைபுத் தொடை

  • ஒரூஉ இயைபு (1,4 சீர்களில் இயைபு)

(காட்டு) நிழலே இனியதன் அயலது கடலே

     (4)     (3)     (2)     (1)

இவ்வடியில் ஒன்றாம் நான்காம் சீர்களில் இயைபு வந்துள்ளது.
இரண்டாம் மூன்றாம் சீர்களில் இயைபு வரவில்லை; ஒருவியுள்ளது.
எனவே, ஒரூஉ இயைபுத் தொடை.

  • கூழை இயைபு (1,2,3 சீர்களில் இயைபு)

(காட்டு) ‘மாதர் நகிலே வல்லே இயலே

         (4) (3)     (2)     (1)

இந்த அடியில் உள்ள மூன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில்
‘லே’ என்று எழுத்து இறுதியில் பயில்கின்றது. கூழைச் சீரில்
(இறுதிச் சீரில்) இயைபு இல்லை. கூழைக் கூந்தல் போலப் பரந்தும்
கடைகுறைந்தும் வரத் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூழை
இயைபுத் தொடை.

  • மேற்கதுவாய் (1,3,4 ஆம் சீர்) இயைபு

(காட்டு) வில்லே நுதலே வேற்கண் கயலே

         (4)     (3)     (2)     (1)

இவ்வடியில் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இயைபு
காணப்படுகின்றது. இரண்டாம் சீரில் இயைபு இல்லை.
முன்பகுதியாகிய     கீழ்ப் பகுதியைவிடப் பின்பகுதியாகிய
மேல்பகுதியில் செறிவு காணப்படுகின்றது. ஆதலின், இவ்வாறு
அமைவது மேற்கதுவாய் எனப்பெறுகின்றது.

  • கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4 ஆம் சீர்களில் ‘இயைபு’)

(காட்டு) பல்லே தவளம் பாலே சொல்லே

         (4)     (3)     (2)     (1)

இதன்கண் அமைந்த நாக்கு சீர்களில் ஒன்றாம் இரண்டாம்
நான்காம் சீர்களின் ஈற்றெழுத்து ‘லே’ என்பது ஒன்றி வந்துள்ளது.
ஈற்றெழுத்து ஒன்றி வருவது ‘இயைபு’ என்பதைப் படித்து
வந்துள்ளீர்கள். இவ்வடியிலுள்ள மூன்றாம் சீரின் இறுதி எழுத்து
‘லே’ என்பதாக இல்லை. அடியின் பின்பகுதியாகிய
மேற்பகுதியைவிட முன்பகுதியாகிய கீழ்ப்பகுதியில்தான் இயைபு
கதுவி (செறிந்து) இருப்பதைக் காண்கின்றோம். எனவே இவ்வாறு
அமையத் தொடுப்பதைக் கீழ்க்கதுவாய் என்கின்றோம்.

  • முற்று இயைபு (1,2,3,4 ஆம் சீர்கள் முற்றிலும் இயைபு)

(காட்டு) ‘புயலே குழலே மயிலே இயலே

         (4) (3)     (2)     (1)

நான்கு சீர்களைக் கொண்டு இயலும் இவ்வளவடியின் சீர்கள்
எல்லாவற்றிலும் முற்றாக (முழுமையாக) ‘லே’ என்னும் இறுதி
எழுத்து ஒன்றிவருவதைக் காண்கின்றோம். இறுதி எழுத்து
முதலியன (அசை, சொல்) ஒன்றுவது தானே இயைபு என்று படித்து
வருகின்றோம். சீர்கள் எல்லாவற்றினும் முற்றாக இயைபுவருவது,
முற்றியைபுத் தொடையாம்.

“மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே
மற்றதன் அயலே முத்துறழ் மணலே
நிழலே இனியதன் அயலது கடலே
மாதர் நகிலே வல்லே இயலே
வில்லே நுதலே வேற்கண் இயலே
பல்லே தவளம் பாலே சொல்லே
புயலே குழலே மயிலே இயலே
அதனால்
இவ்வயின் இவ்வுரு இயங்கலின்
     எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே”

6.2.3 எதுகைத் தொடை விகற்பங்கள்

எதுகை, செய்யுளின் அடிதோறும் வரின், அது அடிஎதுகை
என அழைக்கப்பெறும் என்பதையும் ஓரடியின் சீர்களுக்குள்ளே
அமையும் எதுகை, சீர்எதுகை என அழைக்கப்பெறும் என்பதையும்,
சீர் எதுகைத் தொடை இணை எதுகை, பொழிப்பெதுகை,
ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய்
எதுகை, முற்றெதுகை என எழுவகைப்படும் என்பதையும்
முன்னர்ப்பார்த்தோம். இப்போது அவற்றுக்கான சான்றுகளை
அல்லது காட்டுகளைக் காண்போம்.

  • இணை எதுகை (எதுகை 1,2 சீர்களில் வரல்)

(சான்று) பொ்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப்

     (1)     (2)     (3)     (4)

எதுகை, ஒன்று, இரண்டு என இணைந்து வந்த சீர்களில்
காணப்பெறுகின்றது. மூன்று நான்கு ஆகிய சீர்களில்
காணப்படவில்லை. எனவே, இணை எதுகைத் தொடை.

  • பொழிப்பெதுகை (எதுகை 1,3 சீர்களில் வரல்)

(சான்று) ன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி

     (1)     (2)     (3)     (4)

எதுகை என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றுதல் முதல் சீரிலும்
மூன்றாம் சீரிலும் காணப்பெறுகின்றது. இரண்டாம் சீரிலும் நான்காம்
சீரிலும் காணப்பெறவில்லை. பொழிப்பு - சிறப்பு. இவ்வமைப்பில்
எதுகை பொருந்திவருவது பொழிப்பெதுகைத் தொடை.

  • ஒரூஉ எதுகை (எதுகை 1,4 சீர்களில் வரல்)

(சான்று) ‘மி்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய’

     (1)     (2)     (3)     (4)

இந்த எதுகை இந்த அளவடியிலுள்ள ஒன்றாம் நான்காம்
சீர்களில் அமைந்துள்ளது; இடைநின்ற இரண்டாம் மூன்றாம்
சீர்களில் அமையவில்லை, இரண்டாம் மூன்றாம் சீர்களில்
வருவதனின்றும் ஒருவியுள்ளது. எனவே, இது, (சீர்) ஒரூஉ எதுகைத்
தொடை.

  • கூழை எதுகை (எதுகை 1,2,3 சீர்களில் வரல்)

(சான்று) ன்னிறம் மெ்முலை மின்னிடை வருந்தி’

     (1)     (2)     (3)     (4)

காட்டப்பெற்ற இந்த அளவடியில் அமைந்துள்ள முதல் மூன்று
சீர்களில் ‘ன்’ என்னும் இரண்டாம் எழுத்துப் பொருந்தி
வந்துள்ளது. ’கூழை’ என்றும் இறுதிச்சீரில் எதுகை வரவில்லை.
வருவதினின்றும் குறைந்துவிட்டது. பரந்து (விரிந்து வந்து) வந்து
இறுதி குறையும் அறல் ஒழுக்குப்போல உள்ளது. எனவே,
இவ்வமைப்பில் வந்ததால் கூழை எதுகைத் தொடை.

  • மேற்கதுவாய் எதுகை (1,3,4 சீர்களில் எதுகை பயிலல்)

(சான்று) “எ்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை”

     (1)     (2)     (3)     (4)

இந்த நேரடியிலுள்ள சீர்கள் நான்கனுள் ஒன்றாம் மூன்றாம்
நான்காம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுவதாகிய எதுகை
இடம்பெற்றுள்ளது. இரண்டாம் சீரில் இடம்பெறவில்லை.
இவ்வடியில் முன்பகுதியைவிட, முன்பகுதியின் மேலதாய
பின்பகுதியில் எதுகையின் அடர்த்தி காணப்பெறுகின்றது.
இவ்வகையில் அமைந்துவரத் தொடுக்கும் எதுகைத் தொடை
மேற்கதுவாய் எதுகை எனப்பெறும்.

  • கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4 சீர்களில் எதுகை வருதல்)

(சான்று) “அ்ன மெ்பெடை போலப் ப்மலர்”

     (1)     (2)     (3)     (4)

இச்சீர்களுள் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களில் எதுகை
பயில்கின்றது. மூன்றாம் சீரில் பயிலவில்லை. இந்த நேரடியில்
பின்பகுதியாகிய     மேல்பகுதியை     விட,     மேல்பாதியின்
கீழ்ப்பகுதியாகிய     முன்பகுதியில்     எதுகையின்     செறிவு
காணப்படுகின்றது. இவ்வாறு அமைந்து வருவதைக் கீழ்க்கதுவாய்
எதுகைத் தொடை என்பர்.

  • முற்று எதுகை (எதுகை நான்கு சீர்களிலும் முற்ற அமைவது)

(சான்று) ‘கன்னியம் பு்னை இ்னிழல் து்னிய’

         (1)     (2)     (3)     (4)

இந்த அளவடியின் எல்லாச் சீர்களில் முற்றாக -முழுதுமாக
எதுகை வருகின்றது. இவ்வாறு முழுதுமாக வருமாறு தொடுக்கப்படும்
எதுகைத் தொடை, முற்றெதுகைத் தொடை எனப்பெறும்.

     பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப்
     பன்னருங் கோங்கின் நன்னலம் கவற்றி
    
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய
     நன்னிற மென்முலை மின்னிடை வருந்தி
     என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை
     அன்ன மென்பெடை போலப் பன்மலர்க்
     கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய
     மயிலேய் சாயல்அவ் வாணுதல்
     அயில்வேல் உண்கண்எம் அறிவுதொலைத் தனவே

6.2.4 முரண்தொடை விகற்பங்கள்

மாணாக்கர்களே, நாம், முரண்தொடை விகற்பங்கள் என்று
சொல்லுவது நான்கு சீர்களைக்கொண்ட ஓரடியில், அஃதாவது
அளவடியில் நின்ற சீர்களுக்குள் வருமாறு தொடுப்பதாகிய முரண்
தொடைகளின் வேறுபாடுகளையே ஆகும் என்பதை உளங்கொளல்
வேண்டும். முரண்தொடை விகற்பங்கள் ஏழு. அவை, இணைமுரண்,
பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய்
முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என்றும் தொடை
விகற்பங்களாம். இவற்றுக்கான சான்றுகளைக் காண்போம்.

  • இணைமுரண் (1,2 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று) ீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு’

     (1)     (2)     (3)     (4)

சீர்கள் நான்கனைக் கொண்ட இவ்வளவடிக்குள் அமைந்த
முதலாம் இரண்டாம் சீர்களில் ’சிறுமை’ ’பெருமை’ என்ற முரண்
சொற்கள் இடம்பெறுகின்றன; சொல்முரண், 1,2 ஆம் சீர்களில்
இந்தச் சொல் முரண் அமைந்து வருவதால், இணை முரண்
தொடை எனப்படுகின்றது.

  • பொழிப்பு முரண் (1,3 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று) சுருங்கிய நுசுப்பில் பெருகுவடம் தாங்கி’

         (1)     (2)     (3)     (4)

இந்த அளவடியில் அமைந்துள்ள சீர்கள் நான்கனுள் முதல்சீரின்
சொல்லும் மூன்றாம் சீரின் சொல்லும் தம்முள் முரணிச் சுருங்கல்,
பெருகல் என வருமாற்றைக் காண்கின்றோம். இவ்வாறு ஒன்றாம்
மூன்றாம் சீர்களில் முரண்தொடை காணப்பெறுதலால் இதனை
(இவ்வமைப்பில் வருவதனை) பொழிப்பு முரண் தொடையென
வழங்குவர்.

  • ஒரூஉ முரண் (1,4 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று) குவிந்துசுணங்கு அரும்பிய கொங்கை விரிந்து

     (1)     (2)     (3)     (4)

இந்தச் சீர்களுள் முதலாம் சீரில் ‘குவிந்து’ என்ற சொல்லும்
நான்காம் சீரில் ‘குவிந்து’ என்பதற்கு மாறான-முரண்பட்ட விரிந்து
என்ற சொல்லும் பயில்கின்றன. பயின்று முரண்தொடை ஆகின்றது.
இந்த இரு (1,4) சீர்களுக்கு இடையில் நின்ற இரண்டு மூன்றாம்
சீர்களில் முரண் அமையவில்லை, ஒருவி நிற்கின்றது. எனவே,
இவ்வகை அமைப்பில் முரணுவதை ‘ஒரூஉ முரண்தொடை’ என்பர்.

  • கூழை முரண் (1,2,3 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று) சிறிபெரிநிகர்மலர்க் கோதைதன்’

     (1)     (2)     (3)     (4)

சீர்கள் நான்கனுள் முதல் மூன்றில் (1,2,3 ஆம் சீர்களில்)
முறையே ‘சிறிய’ ‘பெரிய’ என்ற சொற்களும் ‘நிகர்’ என்ற ஒப்புப்
பொருளமைந்த சொல்லும் வந்து தம்முள் ஒன்றுக்கொன்று
முரண்பட்டு நிற்பதைக் காண்கின்றோம். நான்காம் சீரில் முரண்
இன்மையும் காண்கின்றோம். அடிக்கூந்தல் பரந்து நுனிக் கூந்தல்
சிறுத்துக்     காண்பதுபோலவும்     ஆற்றில்     அறல்மணல்
ஒழுக்குப்போலவும் இவ்வகைத் தொடை இருக்கின்றது. ஆதலால்,
இதனைக் கூழை முரண்தொடை என்பர்.

  • மேற்கதுவாய் முரண் (1,3,4 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று) வௌ்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்’

     (1)     (2)     (3)     (4)

இது நேரடி அல்லது அளவடி. இதனுடய சீர்கள் நான்கு.
நான்கனுள் முதல் சீரில் வெண்மை எனும் பண்பைக் குறித்த
‘வெள்’ என்னும் சொல் இடம் பெறுகின்றது; மூன்றாம் சீரில்
செம்மையைக் குறிக்கும் ‘சேய்’ என்னும் சொல் காணப்படுகின்றது;
நான்காம் சீரில் கருமை என்னும் சொல் வந்துள்ளது. இம்மூன்று
சொல்லும் தம்முள் பொருளால் முரணுவன. இத்தகு முரண்
அமைந்த சொல்லொன்றும் அமையப்பெறாத சீராக இரண்டாம் சீர்
இருக்கின்றது.     அடியின்     பின்பாதி முன்பாதியைவிட
முரணமைப்பைக் கொண்டுள்ளது. முன்னதை நோக்கப் பின்னது
மேல்வருவது தானே! எனவே, இவ்வகையில் முரண் தொடை
அமைவதை மேற்கதுவாய் என்கின்றனர்.

  • கீழ்க்கதுவாய் முரண் (1,2,4 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று) இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்

         (1)     (2)     (3)     (4)

இதனில் வரும் நான்கு சீர்களும் மூன்றாம் சீர் தவிர்ந்த ஏனைய
ஒன்று இரண்டு நான்காம் சீர்களில் பொருள்முரண் அமைந்துள்ளது.
இருக்கை-அமர்ந்தநிலை; நிலை-நின்ற நிலை; இயக்கம் -சஞ்சரிக்கும்
நிலை. நான்காம் நிலையென ஒன்றுண்டு; அது, கிடக்கை.
மேற்குறித்த மூன்று நிலைகளும் தம்முள் முரணும் பொருளின.
இங்ஙனம் முரணத் தொடுப்பது முரண் தொடை. இம்முரண்
இவ்வளவடியின் பின்பாதியை விட முன்பாதியேலேயே
கதுவிநிற்கின்றது. பின்னது மேலது; மேலதை நோக்கப் பின்னது
கீழது அன்றோ! ஆதலின் இவ்வகையில் தொடுப்ப அமையும்
முரண் தொடையைக் கீழ்க்கதுவாய் முரண் என்றனர்.

  • முற்று முரண் (1,2,3,4 ஆம் சீர்கள் முற்றிலும் முரண் அமைதல்)

(சான்று) துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாது’

     (1)     (2)     (3)     (4)

முதல்சீரில் உள்ளது ‘துவர்’ எனும் சொல். இது, துவர்ப்புச்
சுவை என்னும் பொருளது. இரண்டாம்சீரில் உள்ளது ‘தீம்’ எனும்
சொல். இது, இனிப்பு என்னும் பொருளைத் தருவது. மூன்றாம் சீரில்
உள்ளது ‘உவ’ எனும் சொல். இது, மகிழ்வு என்னும் பொருளில்
வருவதாம். நான்காம் சீரில் உள்ளது ‘முனி’ எனும் சொல். இது,
வெறுப்பு என்னும் பொருளைப் பயப்பது. இந்நான்கு சொல்லும்
ஒன்றுக்கொள்று முரண்பட்டனவாதல் காணலாம். இவ்வாறு நின்ற
சீர்கள்     நான்கிலும்     முரண்வரத்     தொடுப்பது முற்று
முரண்தொடையாகும்.

     “சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு
     சுருங்கிய நுசுப்பின் பெருகுவடந் தாங்கிக்
     குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து
     சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைகள்
     வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்
     இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்
    
துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாய்
     என்றும் இன்னணம் ஆகுமதி
     பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே”

6.2.5 அளபெடைத் தொடை விகற்பங்கள்

அடியளபெடைத் தொடை எனபது செய்யுளில் வருவது. சீர்
அளபெடைத் தொடை என்பது செய்யுள் அடி ஒன்றனுள் வருவது.
அளவடிகளில் நான்கு சீர்கள் உள்ளன. இவற்றுள் சீர் அளபெடை
தோன்றுவது முதல் சீரில் நிலைக்கின்றது. ஏனைய மூன்று சீர்களில்
மாறிமாறி அமைவதாய் உள்ளது. ஏன்? நான்கு சீர்களிலும் முற்ற
அமைவதாயும் உள்ளது. இந்த அமைதல் வேறுபாட்டால்
அளபெடைத் தொடையில் விகற்பங்கள் வந்துறுகின்றன. அவை
இணை முதல் முற்று வரையுள்ள ஏழாம். அவற்றைக் காட்டுகளுடன்
தெரிந்துகொள்வோம்.

  • இணை அளபெடைத் தொடை(1,2 சீர்களில் அளபெடை வருதல்)

(காட்டு) தாஅள் தாஅ மரைமலர் உழக்கி’

     (1)     (2)     (3)     (4)

முதல் சீர் ‘தாள்’ என்பது. இதன் முதலெழுத்து நெடில்
அளபெடுக்க அசையேற்றுச் சீர் நிரம்புகின்றது. இதுபோலவே
தாமரை என்ற சொல்லின் முதல்நெடில் ‘தா’ என்பது
அளபெடுக்கின்றது. எடுத்து அளபெழுத்து அசையாகின்றது.
பின்னர், ஈரசை என்ற வகையில் சீர் நிரம்புகின்றது. இதனை
மேல் வருங்காட்டுகளிலும் கொள்ள வேண்டும். இங்கு, ஒன்று
இரண்டாம் சீர்களில் அளபெடை வருவதைக் காண்கிறோம்.
இணைந்த இரண்டு சீர்களில் அளபெடுத்து வருமாறு தொடுப்பது
இணையளபெடைத் தொடையாம்.

  • பொழிப்பு அளபெடைத் தொடை (1,3 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று) பூஉக் குவளைப் போஒது அருந்திக்

     (1)     (2)     (3)     (4)

இதுவும் அளவடி. முதல் சீரில் நின்ற ஓரெழுத்து ஒருமொழி
அளபெடுத்து அசைகொண்டது. கொண்டு, சீர் நிரப்புகின்றது.
மூன்றாம் சீரில் நிற்கும் நெடில் தொடர்க்குற்றியலுகரம்(போது)
வருமொழி ‘அகர’ உயிர்ஏற இடங்கொடுத்துப் ‘போ’ என ஓர்
அசையாய் நிற்கவே, அளபெடுக்கின்றது. எடுத்து அசைபெற்றுச்
சீரை நிரப்புகின்றது. எனவே, அவையும் சீராம். முதல் சீரிலும்
மூன்றாம் சீரிலும் அளபெடை பயில்கின்றது. முதல் சீரிலும்
மூன்றாம் சீரிலும் தொடைபயில்வதைப் பொழிப்புத் தொடை
என்பர். இப்பொழிப்பு வகையில் அளபெடை வருவதால் பொழிப்பு
அளபெடைத் தொடை என்றல் மரபு.

  • ஒரூஉ அளபெடைத் தொடை(1,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று) காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய்’

     (1)     (2)     (3)     (4)

இவ்வளவடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் அளபெடை
அமையுமாறு காண்கின்றோம். இடைநின்ற இரண்டாம் மூன்றாம்
சீர்களில் அளபெடை வாராமல் ஒருவி நிற்பதையும்
காண்கின்றோம். இடையில் ஒருவி முதல் சீரிலும் நான்காம் சீரிலும்
அளபெடை வருவாறு தொடுப்பது ஒரூஉ அளபெடைத் தொடை என வழங்கப் பெறும்.

  • கூழை அளபெடைத் தொடை(1,2,3 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று) மாஅத் தாஅள் மோஒட்(டு) எருமை’

     (1)     (2)     (3)     (4)

இந்த நேரடியில் முதல் மூன்று சீர்களும் அளபெடை பயிலுமாறு
தொடுக்கப்பட்டுள்ளன. கடையொரு சீராகிய கூழைச் சீரில்
அளபெடை பயிலவில்லை. முன் கூறப்பட்ட ஆற்றின் அறல்மணல்
ஒழுக்கை எண்ணிப்பாருங்கள். தொடக்கத்தில் விசாலித்தும் (பரந்து
அகன்றும்) இறுதியில் சுருங்கி இற்றும் முடியும் தோற்றம்
நினைவுக்கு வரும். அதுபோலத் தொடக்கச் சீர்களில் மிகுந்தும்
இறுதிச் சீரில் இன்றியும் வருமாறு அளபெடையைத் தொடுக்கும்
இவ்வகையை கூழை அளபெடைத் தொடை எனல் மரபாம்.

  • மேற்கதுவாய் அளபெடைத் தொடை (1,3,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று) தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல்’

     (1)     (2)     (3)     (4)

இந்த நேரடியில் பின்பகுதியிலுள்ள மூன்றாம் நான்காம்
சீர்களில் அளபெடை பயில்கின்றது. முன்பகுதியில் உள்ள இரு
சீர்களில் முதலில் நின்ற சீரில் மட்டுமே அளபெடை பயில்கின்றது;
இரண்டாம் சீரில் பயிலவில்லை. மேல்பாதியில் அளபெடை
செறிந்து தோன்றுவதால் மேற்கதுவாய் அளபெடைத் தொடை
எனப்படுகின்றது.

  • கீழ்க்கதுவாய் அளபெடைத் தொடை (1,2,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று) மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர்’

     (1)     (2)     (3)     (4)

இவற்றுள் ஒன்று இரண்டு நான்கு ஆகிய சீர்களில் அளபெடை
பயில்கின்றது; மூன்றாம் சீரில் பயிலவில்லை. முதல்சீரும் இரண்டாம்
சீரும் கொண்ட கீழ்ப்பாதியில் அளபெடையின் செறிவு-கதுவுதல்
காணப்படுகின்றது. மூன்றாம் சீரையும் நான்காம் சீரையும் கொண்ட
மல்பகுதியில் இத்தகைய செறிவு காணப்படவில்லை. எனவே,
செறிவு உள்ள பகுதியை நோக்கிக் கீழ்க்கதுவாய் அளபெடைத்

  • முற்று அளபெடைத் தொடை (1,2,3,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று) ஆஅ னாநீஇள் நீர்’

     (1) (2) (3) (4)

இந்த அளவடியில் அமைந்தள்ள எல்லாச் சீர்களிலும் முற்றாக
(முழுதுமாக) அளபெடைத்தொடை வருமாறு தொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, முற்றுமாகத் தொடுக்கப்பெறும் காரணம் பற்றி முற்று
அளபெடைத் தொடை எனப்பெறுகின்றது.

     “தாஅள் தாஅ மரைமலர் உழக்கிப்
     பூஉக் குவளைப் போஒது அருந்திக்
     காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய்
     மாஅத் தாஅள் மோஒட் டெருமைத்
     தேஎம் புனல்இடை சோஒர் பாஅல்
     மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர்
     ஆஅ னாஅ நீஇள் நீஇர்
     ஊரன் செய்த கேண்மை
     ஆய்வளைத் தோளிக்கு அலரா னாவே”