தன் மதிப்பீடு - I : விடைகள்

1.

களவு வெளிப்பாட்டுக் கிளவிகள் எத்தனை? யாவை? விளக்குக.

களவு ஒழுக்கம் வெளிப்படாத போது, வரைவு
மலிதல், அறத்தொடு நிற்றல் முதலான செயல்பாடுகள்
நிகழும். அவற்றின் வழி கற்பு வாழ்வு மலரும்.
அதற்கு மாறாகத் தலைமக்களின் களவு வாழ்க்கை
வெளிப்படும் வண்ணம் அதுபற்றியே பலரும்
அலர்தூற்றிப் பேசும் நிலையில் நிகழும் கிளவிகளை,
களவு வெளிப்பாட்டுக் கிளவிகள் என்பர். அவற்றை,
உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி
என்னும் மூன்று வகையான     நிகழ்ச்சிகளாக
வரிசைப்படுத்தி வழங்குவார் நாற்கவிராச நம்பி.

முன்