தன் மதிப்பீடு - I : விடைகள்

2.

உள்ளுறை உவமம் - விளக்கம் தருக.

உள்ளுறை என்னும் சொல்லை, உள்+உறை எனப்பிரித்துப்
பொருள் காணலாம். ஒரு பாடலில், உட் கருத்தாக ஒன்று
மறைந்து நிற்பது உள்ளுறை எனப்படும். அவ்வாறு மறைந்து
நிற்கும் கருத்துக்கு, கருப்பொருள் நிகழ்ச்சி அடிப்படையாக
(உவமைபோல) அமையும்போது அதனை உள்ளுறை உவமம்
என்று கூறுவர்.

உள்ளுறை உவமம்     பெரும்பான்மையும் அகப்பொருட்
செய்யுட்களில் இடம்பெறும். கருப்பொருளை மையப்படுத்தி
வெளிப்படையாகச் சொல்லப்பட்ட செய்தியை உவமையாகக்
கொண்டு அதன் மூலம உணரத்தக்க வேறோர் செய்தியை
அறிவதே உள்ளுறை உவமம் ஆகும். உள்ளுறை உவமம்
பற்றிய இலக்கணத்தை நாற்கவிராச நம்பி

உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
புள்ெளாடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்


என்று ஒரு நூற்பாவின் மூலம் வரையறுத்துள்ளார்.

முன்