1.8 தொகுப்புரை

    சங்க காலத்தில் தமிழர்கள் இயற்கையோடு இணைந்து சமய வேறுபாடு இன்றி வாழ்ந்து வந்தனர். பின்னர் காலப்போக்கில் வாழ்க்கை நெறிமுறைகள், அறச்சிந்தையோடு கூடி, பக்தி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பக்தி இயக்கம் சமயப்புரட்சியாகி, சமய வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது. அதனால் மனிதன், மனிதப் பண்புகளோடு வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்தான். காலங்கள் தோறும் சான்றோர்கள் தோன்றி, பக்தி இயக்கம் என்னும் தேரைச் செலுத்தி வந்திருக்கின்றனர். அன்று முதல் இன்றுவரை பக்தி இயக்கத்தால் சமயம் வளர்ந்ததோடன்றித் தமிழும் வளர்ந்தது. காலப்போக்கில் புதிய புதிய யாப்பு வடிவங்கள் தோன்றிச் சமயமும் தமிழும் வளம் பெற்றுத் திகழ்கின்றன. இதன் விளைவாகப் பல்வேறு வடிவங்களில் இறையுணர்வும் பக்தி நெறியும் தொடர்ந்து வளர்க்கப்பட்டன. காலந்தோறும் தொடர்ந்து வரும் சமய நூல்களை, பக்தி இலக்கியம் என்னும் இலக்கிய வகைமையில் அடக்கலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
கல்லாடர் இயற்றிய நூலின் பெயர் என்ன?
2.
சேக்கிழார் பாடிய நூல் யாது?
3.
திருப்பாவையைப் பாடியவர் யார்?
4.
காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதியின் பெயர் என்ன?

5.

ஆதிஉலா என்றழைக்கப்படும் நூலின் பெயர் என்ன?

6.

இறைவனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கியம் யாது?

7.

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல் யாது?

8.

தலபுராண நூலின் பயன் யாது?