1) சிவஞான முனிவரின் உரைநடைச் சிறப்பு யாது?
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சிவஞான
முனிவர் உரையாசிரியர்கள் கையாண்ட உயரிய
நடையைக் கையாண்டார். சிவஞான போத மாபாடியம்,
இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச்
சூத்திரவிருத்தி முதலிய உரைநடை நூல்களை
இயற்றியுள்ளார். பேச்சு வழக்கை ஒட்டியே உரைநடை
நூல்களைப் படைத்தார். இவரது உரைநடை நுட்பமான
பொருளைத்     தெளிவாக விளக்கமாகக் கூறும்
தன்மையுடையது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
திறன் படைத்தது. நடையிலே வேகமும் கம்பீரமும்
தெளிவும் காணப்படும்.


முன்