6.9. தொகுப்புரை     

  • கவிதையின் ஆட்சியிலிருந்து மெல்ல மெல்ல விலகிய மொழி இன்று உரைநடைக்குள் அடங்கி விட்டது.

  • தொல்காப்பியர்     காலத்திற்கு     முன்பே உரைநடை தோன்றியுள்ளது.

  • காப்பியங்களிலும் உரைநடை பற்றிய குறிப்புகள் உண்டு. சிலம்பு “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’’ என்றே குறிக்கப்படுகின்றது.

  • இறையனார் களவியல் உரை தமிழ் உரைநடையில் சிறப்பிடம் பெறுகின்றது.

  • வைணவர்கள், சமணர்கள் வடமொழியும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையை உருவாக்கினர்.

  • சைவ உரைநடையை மடங்கள் வளர்த்தன.

  • உரையாசிரியர்களின் உரை, உரைநடைக்குப் பெரும் சிறப்பைத் தந்தன.

  • கல்வெட்டுகள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதலே உரைநடையில் அமைந்திருந்தன.

  • ஐரோப்பியர்     வருகையும், அச்சு இயந்திரங்களும் தமிழ் உரைநடையைப் பெரிதும் மாற்றியமைத்தன. உரைநடை தலைமையிடம் பெற்றது.

  • வள்ளலார், ஆறுமுக நாவலர் எனத் தொடங்கிப் பல தமிழ் அறிஞர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், இதழாளர்கள், நாடக ஆசிரியர்கள், திராவிட இயக்கத்தினர் எனப் பலரும் தமிழ் உரைநடைக்குப் பெரும் தொண்டு புரிந்தனர்.

  • இன்றைய உரைநடை தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் எனும் கோட்பாடுகளை ஏற்றுப் போராட்ட ஆயுதமாய், மன உணர்வுகளைத் தூண்டுவதாய், வட்டார மொழியிலேயே வெளிப்படுகின்றது.

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    சிவஞான முனிவரின் உரைநடைச் சிறப்பு யாது?

    2.

    தமிழ் உரைநடையின் தந்தை யார்? அவரின் உரைநடைத் தொண்டு யாது?

    3.

    திரு. வி.க.வின் உரைநடை நூல்கள் யாவை?

    4.

    தமிழ்நாட்டுச் சாக்ரடீஸ் யார்? அவரது உரைநடைச் சிறப்பு யாது?

    5.

    ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூற்கள் யாவை? உரைச் சிறப்பு யாது?

    6.

    மு.வ. வின் உரைநடைச் சிறப்பினைக் கூறுக.

    7.

    தமிழில் தோன்றிய முதல் உரைநடை நாடகத்தின் பெயர் என்ன?

    8.

    வேதநாயகம் பிள்ளையின் உரைநடைச் சிறப்பினைக் கூறுக.

    9.

    புதுமைப்பித்தன் நடைச்சிறப்பு யாது?

    10.

    கல்கியின் நடைச்சிறப்புகள் யாவை?

    11.

    சுஜாதாவின் நடைச்சிறப்பினைக் கூறுக.

    12.

    தலித்திய உரைநடை ஆசிரியர்கள் யாவர்?

    13.

    பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் யாவர்?