2) தமிழ் உரைநடையின் தந்தை யார்? அவரின்
உரைநடைத் தொண்டு யாது?
தமிழ் உரைநடையின் தந்தையாக வருணிக்கப்படுபவர்
ஆறுமுக நாவலர் ஆவார். கிறிஸ்தவ சமயப் பரவலுக்கு
எதிராக சைவ சமயத்தை நிலைபெறச் செய்யத் தமிழகம்
வந்து சிதம்பரத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல
தமிழ்நூல்களை     வெளியிட்டார்.     இவர்
திருமுருகாற்றுப்படை உரை, நன்னூல் காண்டிகை உரை,
திருவிளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம்,
இலக்கண வினா விடை, சைவ வினா விடை,
யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லறிவுச் சுடர் கொளுத்தல்
ஆகிய உரைநடை நூல்களை வெளியிட்டார்.


முன்