|
களிமண்ணோடு
பசைப் பொருட்களைச் சேர்த்து
உருவாக்கப்
பட்ட அடித்தளத்தில் வரையப் பட்ட அஜந்தா ஓவியங்களுக்கு
மாறாக, முழுவதுமாகச் சுண்ணாம்புப் பூச்சாலான நன்கு உலர்ந்த
அடித்தளத்தின் மீது சித்தன்ன வாசல்
ஓவியங்கள் தீட்டப்
பட்டுள்ளன. இவ்வகை அடித்தளத்தின் மீது சுண்ணாம்பு
நீரே
மீண்டும் அடிக்கப் பட்டு உறுதியாக்கப்
பட்டது. இதனால்
முன்னதைக் காட்டிலும் வலிவும்
உறுதியும் கொண்டதாக
அடித்தளம் இருக்கிறது. சித்தன்ன
வாசல் ஓவியம்,
மிருதுவான மென்மையான மூன்று
அடுக்குகளைக் கொண்டது.
இவை முறையே 2.5 மி.மீ., 0.5
மி.மீ., 0.4 மி.மீ., கன
முள்ளவையாகக் காணப் படுகின்றன. இதற்கு
மாறாக அஜந்தா
ஓவியத்தின் அடித்தளம் 15மி.மீ. வரை கனமுள்ளதாக உள்ளது.
இதனால் அஜந்தா ஓவியத்தினைக் காட்டிலும்
தொழில் நுட்ப
முறையில் சித்தன்ன வாசல்
ஓவியம் தலைசிறந்ததாக
விளங்குகிறது.
|