|
4.7 தொகுப்புரை |
|
வெண்சுதை மீது ஓவியம் தீட்டும் தொழில் நுட்பம் சங்க காலத்தில் தோன்றிப் பல்லவர், பாண்டியர் காலங்களில் வளர்ந்து, சோழர் காலத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது. அதன் பின்னர் விசய நகர வேந்தர், நாயக்கர் காலங்களில் படிப்படியே தமிழ்நாட்டில் வீழ்ச்சியடைந்தது. நாயக்கர் காலத்தில் அளவிற்கு அதிகமான ஓவியங்கள் கோயில்களில் வரையப் பட்டன. ஆனால் அவை தொழில் நுட்பத் தரத்தின் அளவில் குறைவாகவே உள்ளன. உறுதியற்ற கனம் குறைவான மெல்லிய வெண்சுதைப் பூச்சின் மீது இவை வரையப் பட்டன. இதனால் இவை அதிகக் காலம் நிலைத்திருக்கவில்லை. இயற்கையின் தாக்குதலாலும் மனிதனின் அறியாமையாலும் பண்பாடற்ற செயல்களாலும் அழிந்து கொண்டு வருகின்றன. |
| 1. |
அண்மைக் கால ஆய்வாளர்கள் கூறும் மூவகை ஓவியத் தொழில் நுட்பங்களைக் கூறுக. |
விடை |
| 2. |
சித்தன்ன வாசல் ஓவியம் எவ்வகைத் தொழில் நுட்பத்தைப் பின்பற்றி வரையப் பட்டுள்ளது? |
விடை |
| 3. |
சித்தன்ன வாசல் ஓவியங்களின் சிறப்புகளைத் தொகுத்தெழுதுக, |
விடை |
| 4. |
வெண்சுதை ஓவியம் பற்றி எந்த இலக்கியத்தில் குறிப்பிடப் படுகிறது? |
விடை |
| 5. |
ஏன் பிற்கால ஓவியங்கள் அழிந்து வருகின்றன? |
விடை |