1) | தேர்ச் சிற்பங்கள் பற்றி எழுதுக. |
கல்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் இரதங்களுக்கு மரத் தேர்களே முன்மாதிரியாய் அமைந்தன. தேர்கள் நடமாடும் கோயில்களாகும். திருவிழாக் காலங்களில் அவை வீதி உலாவுக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு தட்டிலும் இறையுரு வங்கள், சமுதாயத் தொடர்பான சிற்பங்கள் இடம் பெறுகின்றன. தற்போது கிடைக்கின்ற தேர்கள் விசயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். |