1.5 தொகுப்புரை


    பழந்தமிழ்நாட்டில் சிவ வழிபாடு என்ற இப்பாடத்தில்
சங்க காலம் தொடங்கி திருமுறைகளின் காலம் வரை
காணப்படுகின்ற சிவ வழிபாட்டுச் செய்திகள் திரட்டித் தரப்
பெற்றுள்ளன. வழிபாடுகள் பலவகையில் அமைந்துள்ளன
என்பதும் கால நியதிப்படி சுட்டிக் காட்டப் பெற்றுள்ளது.
திருமுறைகளின் காலமான 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு
தற்காலம் வரை சிவ வழிபாடு பண்டைய மரபுப்படி நடந்து
வருகிறது என்பதை அறியலாம்.

    சிவ வழிபாடு இயற்கை வழிபாடுகளில் தொடங்கி, உருவ,
அருவ, அருவுருவ வழிபாடாக வளர்ந்து, அடியார் வழிபாடு
என்ற நிலையில் மனித நேயமாக மிளிர்வதை இப்பாட
வழிகாட்டியால் அறிந்து கொள்ளலாம்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்கள்
இரண்டினைக் கூறுக.
2. சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவையில் இடம் பெற்ற
சிவ வழிபாட்டுச் செய்திகளைக் கூறுக.
3. காரைக்கால் அம்மையாரின் நூல்கள் யாவை?
4. திருமந்திரத்தில் கூறப்படுகின்ற சிவவழிபாட்டு
நெறிகள் யாவை?
5. 12ஆம் திருமுறையான பெரிய புராணத்தில்
இடம்பெற்றுள்ள மூவகை வழிபாடுகள் யாவை?