பழந்தமிழ் நூல்களின் வழி நின்று
சைவ சமயத்தின்
வழிபாட்டு நெறிமுறைகள் இப்பாடத்தில் வகுத்துக் காட்டப்
பெற்றுள்ளன. வழிபாடுகள் காலத்திற்குக் காலம் வேறுபட்டுக்
காணப்பட்டாலும் தோத்திரங்களும், சாத்திரங்களும் தொகுத்துக்
காட்டிய நால்வகை நெறிகள் இப்பாடத்தில் தெளிவாகத்
தரப்பெற்றுள்ளன. அந்நெறிமுறைகளைப் பின்பற்றினால்
என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதும் சுட்டிக்
காட்டப் பெற்றுள்ளது.
இந்த நெறியின் அடிப்படையில்
நடைமுறை வழிபாடு, 'அன்றாட வழிபாடு, சிறப்பு வழிபாடு' என்ற
இருநிலையில் விளக்கப்பட்டுள்ளது. குரு, இலிங்க, சங்கம
வழிபாட்டின் அடிப்படையில் சிவச் சின்னங்களை அணிந்து
வழிபடும் முறைமையும் இப்பாடத்தில்
தொகுத்துக்
காட்டப்பட்டுள்ளது. |