5.3 உடம்படு மெய்

    தமிழ் முதலிய திராவிட மொழிகளில் எல்லா உயிரொலியும்
தனித்தனியே     உச்சரிக்கப்படுகின்றன.     தெளிவாக
உச்சரிக்கப்படுகின்றன. உயிரொலி இரண்டு வந்தால் ஒலிப்பது
கடினம். இரண்டுக்கும் இடையே ், ் சேர்த்து ஒலிக்கப்படும்
நிலை உள்ளது. அந்த ், ் என்னும் மெய் எழுத்துகள்
உடம்படுமெய்
எனப்படுகின்றன.

சான்று:     சி + ணி - சிலணி - தமிழ்
     வ் - உடம்படுமெய் தோன்றுதல்.    

     மணி + அழகு - மணியழகு - தமிழ்
     ய் - உடம்படுமெய்.

தெலுங்கில், ‘ரகரம்’ ‘ககரம்’ உடம்படுமெய்யாக வருகின்றன.

சான்று:

    பொ + இல்லு - பொதரில்லு (இலைவீடு) - தெலுங்கு
    ர் - உடம்படுமெய்.

    பத + ண்டு - பதகொண்டு - (பதினொன்று) - தெலுங்கு
    க் - உடம்படுமெய்.

    அறுர் - தமிழ்
    வ் - உடம்படுமெய்.

    ஆறுகுரு - தெலுங்கு
    க் உடம்படுமெய்.

    கூயி போன்ற திராவிட மொழிகளிலும் உடம்படுமெய்
உள்ளது. வடமொழியில் இரண்டு உயிரும் சேர்ந்து ஓர்
உயிராக மாறிவிடும் நிலை உள்ளது.

சான்று:

    ம + திபதி - மடாதிபதி - வடமொழி

ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இவ்வாறு ஓர் உயிர்,
அடுத்து வரும் உயிரோடு இணைதல் உண்டு. தமிழில் ஓரிரு
இடத்தில் இந்நிலை உண்டு.

சான்று:     பரு+அரை- பராரை - தமிழ்

5.3.1 தனித்தனி வடிவங்கள்

    திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்று பகுக்கப்படுகின்றன. இவற்றுக்குத் தனித்தனி வரிவடிவம் உண்டு. அவை பொருள் வேறுபாட்டைத் தோற்றுவிப்பன. தமிழில் அணி என்பதும் ஆணி என்பதும் வேறு வேறு பொருள் கொண்ட சொற்கள். , என்பன இவ்வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன. அ, ஆ இரண்டும் தனித்தனி ஒலியன்களாகும்.

சான்று:     து
         மாது

    திராவிட மொழிகளில் குறில், நெடில் வேறுபாடு இன்றியமையாததாக உள்ளது.

5.3.2 ஒலிப்பு முறை

    ஒலிக்கும் போது எழுத்தை அழுத்தமாகச் சொல்லலாம்.
மென்மையாகச் சொல்லலாம். ஒலிக்கும் முறையில் தமிழில்
எடுத்தல் (அழுத்திச் சொல்லுதல்) படுத்தல் (மெலிதாக
உச்சரித்தல்) நலிதல் (வேறுபடுத்தி ஒலித்தல்) என்னும் ஒலிப்பு
வேறுபாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இவை நுட்பமானவை.
இவற்றைப் பிறமொழியினர் உணர்தல் கடினம்.

சான்று:      நான் சிங்கத்தைப் பார்த்தேன்.

    இதில் நான் என்ற எழுவாயை அழுத்தி ஒலித்தால்,
‘நான்தான் பார்த்தேன் வேறு யாரும் பார்க்கவில்லை’ என்ற
பொருள் கிடைக்கும்.

    இதில் சிங்கத்தை என்னும் செயப்படுபொருளை எடுத்து
ஒலித்தால், ‘நான் சிங்கத்தைத்தான் பார்த்தேன். வேறு எதையும்
பார்க்கவில்லை’ என்ற பொருள் தொனிக்கும்.

    இதில் பார்த்தேன் என்னும் சொல்லை எடுத்து ஒலித்தால்,
‘நான் வேறு ஒன்றும் செய்யவில்லை. பார்க்க மட்டுமே
செய்தேன்’ என்று பொருள் தரும்.

    இது வாக்கிய ஒலியழுத்தம் ஆகும். நீ சொன்னது சரி
என்பதை ஒலிப்பதன் மூலம், நீ சொன்னது சரி என்ற எளிய
பொருள் கிடைக்கும். நீ சொன்னது சரியில்லை என்ற எதிர்மறைப்
பொருளும் கிடைக்கும்.

    அவன் வந்தான் என்பதை,

    அவன் வந்தான்,
    அவன் வந்தான்?
    அவன் வந்தான்!

    என மூவகைப் பொருள் வர ஒலிக்கலாம். அவன் வந்ததைக்
கூறுவது முதல் வாக்கியம். அவன் வந்ததைக் கேட்கும் வினா
வாக்கியம் இரண்டாவது, வியப்பைத் தெரிவிப்பது மூன்றாம்
வாக்கியம். இவ்வாறு எதிர்மறைப் பொருள், எள்ளல் பொருள்,
வினாப் பொருள், வியப்புப் பொருள் உணர்த்தப்படுவது ஒலி
வேறுபாட்டால் எனலாம். இது எழுத்தில் புலப்படுத்த இயலாதது.
பேச்சில் இயல்பாய் அமைவது, எல்லாப் பேச்சு மொழிகளிலும்
உண்டு.

5.3.3 சொல் அமையும் முறை


    எழுத்துகள் சேர்ந்து சொற்கள் அமையும். திராவிட
மொழிகளில் எளிய முறையிலேயே சொற்கள் அமைகின்றன.
ஒலிக்க இயலாத கூட்டொலிகளையும், ஒலியமைப்பிற்குக் கூடா
ஒலிகளையும் திராவிட மொழிகள் ஒதுக்கி வந்திருக்கின்றன.
உயிரும், மெய்யும் சேர்ந்து ஒலித்தற்கு எளியனவாக உள்ள
அசைகள் சொற்களாகத் திராவிட மொழிகளில் வருகின்றன.

  • த்வனி
  • ப்ரபாவம்
  • ச்ரிய கல்யாண்

        முதலிய கூட்டொலிகள் வடமொழியில் உள்ளன. அத்தகு
    வடசொற்கள் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில்
    உள்ளன. அவை இரவலே. அம்மொழிகளது இயற்கையான
    ஒலிகள் அல்ல. அச்சொற்களைத் திராவிட ஒலி அமைப்புக்கேற்ப
    அமைத்துக் கொள்ளும் மொழி தமிழ். தமிழில் பழைய திராவிட
    மொழியின் ஒலியமைப்பு அதிகம் மாறாமல் இருந்து வருகிறது.

    சான்று:
        

    State - இருமெய் முதலில் வரல்.
    Strong - மூன்று மெய் முதலில் வரல்.

        ஆங்கிலம் போன்ற மொழிகளில் இப்படி இரண்டு மெய்யும்,
    மூன்று மெய்யும் சொல்லுக்கு முதலில் வருவது போல் தமிழில்
    வருதல் இல்லை. மெய் மற்றொரு மெய்யுடன் கூடி முதலில்
    வருதல் இல்லை. மெய் உயிருடன் கூடியே மொழிக்கு முதலில்
    வரும்.

    5.3.4 சொல்கலப்பு

        ஆங்கிலச் சொற்களும் வடமொழிச் சொற்களும் தமிழில்
    புகும்போது, தமிழுக்கேற்ற ஒலிமுறையைப் பெறுகின்றன.

    எ.கா.

    இங்க்லான்ட் இங்கிலாந்து ஆங்கிலச் சொல்
    தமிழ் ஒலிப்பு முறை
    பெறுதல்
    க்றைஸ்ட் கிறிஸ்து - கிறித்து

    எ.கா.

    தத்வ தத்துவம் வடசொல் தமிழ்ஒலிப்பு முறை பெறுதல்
    க்ருஷ்ண கிருட்ண - கிருட்டினன்

        தமிழில் கூட்டொலிகள் குறைவு. பொருந்தா ஒலிகள்
    கூடுவதில்லை.

        வடமொழி முதலான இந்தோ-ஐரோப்பிய மொழிகளில்
    நெடுஞ்சொற்கள் குறைவு. எனினும் எளிய ஒலியசைகள்
    அம்மொழிகளில் இல்லை. தமிழில் சொற்கள் நீண்டிருப்பினும்
    எளிதில்     ஒலிக்கும்படி     உள்ளன.     வடசொற்கள்,
    ஆங்கிலச் சொற்கள், பிற சொற்கள் எவையாயினும், தமிழ் ஒலிப்பு
    முறை பெறுவது தமிழுக்கே உரிய தனி இயல்பாகும்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் I

    1.
    குடும்ப மொழிகள் என்றால் என்ன? திராவிட மொழிக்
    குடும்பத்தில் தமிழ் பெறும் இடம் யாது?
    2.
    திராவிட மொழிகளில் அடிப்படைச் சொற்கள்
    ஒன்றுபட்டு இருத்தலுக்குச் சான்று தருக.
    3.
    மூவிடப்பெயர் என்றால் என்ன? திராவிட மொழிகளில்
    எங்ஙனம் உள்ளது?
    4.
    உடம்படுமெய் என்றால் என்ன?
    5.
    திராவிட மொழிகளில் உயிரெழுத்துகள் எங்ஙனம்
    அமைந்துள்ளன?
    6.
    வடமொழிச் சொற்கள்     தமிழில் எங்ஙனம்
    ஏற்றுக் கொள்ளப்படுகின்றன?