6.7 தொகுப்புரை

    மனிதர்கள் சேர்ந்து வாழும் இயல்பினர். தமக்குள் மொழியின்
வாயிலாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். அவர்களது
தொழில், சமயம், சாதி, இனம், வாழ்வியல், வரலாறு, பண்பாடு,
நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வாழும் நிலம், காலச் சூழல்,
சுற்றுச் சூழல் போன்றவற்றை எல்லாம் அவர்களது மொழி பதிவு
செய்கிறது. அவ்வகையில் சமூகத்துக்கும், மொழிக்கும் இடையே
உள்ள     உறவு     நெருக்கமானது. இன்றியமையாதது.
தவிர்க்கவியலாதது. தமிழ்ச்     சமூகத்தினரது உறவு முறைச்
சொற்களை மானுடவியல் நோக்கில் பரிசீலித்தலும், தமிழில்
வசைச் சொற்களை சமூகவியல் நோக்கில் பரிசீலித்தலும்,
தமிழகத்தின் ஊர்ப்பெயர்கள், இடப் பெயர்களை வரலாற்றுப்
போக்கில் ஆராய்தலும், தமிழர் தம் பெயர்களை ஆய்தலும்,
தனித்தமிழ் இயக்கம் தோன்றி வளர்ந்து தோற்றுவித்த தாக்கத்தை
மதிப்பிடுவதும், பெண்பாற் சொற்கள்- ஆண்பால் சொற்களைப்
பெண்ணிய நோக்கில் ஆய்ந்து, பால்பேதம் இருத்தலைப்
புலப்படுத்துவதும் ஆக ஆய்வுத் தளம் மேலும் விரிவடைந்து
வருகிறது.


தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.
மாற்றொலி என்றால் என்ன? சான்று தருக.
2.
உருபன் என்றால் என்ன?
3.
தமிழில் உள்ள சொற்களை எங்ஙனம் வகைப்படுத்து
கின்றனர்?
4.
உருபொலியன் என்றால் என்ன?