தமிழ் நாடக மேடைக்கான பல சீரமைப்புப் பணிகள் இக்கால
கட்டத்தில் நடைபெறலாயின. புதிய தலைமுறைக் கலைஞர்கள்
தோன்றி வளர்ந்தனர். அவர்கள் அந்தக் கால கட்டத்தில் நாடகப்
பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
புதிய நாடகக் குழுக்களும், அவற்றின்
மூலம் புதுப்புது
நாடகங்களும் உருவாக்கம் பெற்றன.
நல்ல பார்வையாளர் தமிழ் நாடக மேடைக்குக் கிடைத்தனர்.
இவ்வகையில் நாடகத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
|