1.8 தொகுப்புரை
 

செப்புத் திருமேனிகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு இவற்றின் கலவையால் உருவாக்கப் பட்டதாகும். தமிழகத்தில் சங்க காலத்தில் தொடங்கி, பல்லவர் காலத்தில் வளர்ந்து, சோழர் காலத்தில் இக்கலை பெருவளர்ச்சி கண்டது. தென்னிந்தியச்     செப்புத்     திருமேனிகள்     என்றால் சோழர்கள்தாம் நினைவுக்கு வருவர். அவ்வகையில் கனமான அமைப்புடைய அவர்களது படிமங்கள் உலகப் புகழ் பெற்றனவாகும். விசயநகர - நாயக்க மன்னர்களும் இம்மரபைப் பெரிதும் பின்பற்றினர். இறையுருவங்களே அன்றிச் சமயக் குரவர்களான நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் கூடப் படிமங்கள் செய்விக்கப் பட்டன. இன்றும் இக்கலை வளர்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் பலகலை வல்லுநர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முன்னமே குறிப்பிட்டது     போல்     இத்திருமேனிகள்     கோயில் திருவிழாக்களின் போது பல்லக்கில் வீதிகளுக்கு எடுத்துச் செல்லப் படுபவை ஆகும்.

 

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

கால்மாறி ஆடிய நடராசர் செப்புத் திருமேனி பற்றிக் கூறுக.

விடை
2.

பாண்டியர் காலத்துச் சந்திரசேகரர் செப்புப் படிமங்கள் எங்கெங்கு உள்ளன?

விடை
3.

பாண்டியர் காலத்து இறையுருவமல்லாத பிற திருமேனிகள் யாவை? அவை எங்கெங்கு உள்ளன?

விடை
4.

விசயநகர - நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட முக்கியமான படிமங்கள் யாவை?

விடை
5.

நடராசர் செப்புத் திருமேனி வெளிப்படுத்தும் செய்தி யாது?

விடை