3)

பாண்டியர் காலத்து இறையுருவமல்லாத பிற
திருமேனிகள் யாவை? அவை எங்கெங்கு உள்ளன?

இறையுருவமல்லாத     பிற     திருமேனிகள்
நாயன்மார்களின்     உருவங்களாகும்.     இலுப்பைக்
குடியிலும், வீரபாண்டியிலும் சண்டிகேசுவரர் படிமங்கள்
செய்விக்கப் பட்டன. சேரன் மாதேவியில் அதிகார
நந்தியின் படிமம் அமைக்கப்பட்டது. மதுரையில்
அப்பரது வடிவம் இடம் பெற்றது. இலுப்பைக்குடி,
பேரையூர் ஆகிய ஊர்களில் ஞானசம்பந்தர் படிமம்
கிடைத்துள்ளது. இலுப்பைக் குடியில் சுந்தரர் படிமம்
கிடைத்துள்ளது.     திருவரங்குளம்,     பேரையூர்,
திருநெல்வேலி, திருவாதவூர், அரண்மனைச் சிறுவயல்,
ஆத்தூர், மதுரை, திருப்பத்தூர், வடவம்பட்டி, கானாடு
காத்தான், கண்டதேவிக் கோட்டை ஆகிய இடங்களில்
மாணிக்கவாசகர்     படிமம்     செய்விக்கப்பட்டது.
திருக்கோட்டியூரில்     ஆழ்வார்களது    படிமங்கள்
அமைக்கப்பட்டன.


முன்