1.6 தொகுப்புரை


உள்ளத்துள் உள்ளது கவிதை என்று பாடினார் கவிமணி.
உள்ளத்தில் இருந்து வெளிப்படும் கவிதை ஒரு வடிவம்
பெறுகிறது. இதற்கென்று     ஓர் இலக்கணம் உண்டு.
அவ்விலக்கணத்தின் அடிப்படையில் அமையும் கவிதையை
மரபுக்கவிதை என்றும், கட்டுப்பாடுகளை உடைத்து வெளிப்படும்
கவிதையைப் புதுக்கவிதை என்றும் பொதுவாகச் சொல்லலாம்.
இவ்விரண்டு வகைக்     கவிதைகளின் அமைப்பையும்,
போக்கையும் வளர்ச்சியையும் அவற்றின் பாடுபொருளையும்
பற்றி விளக்கமாக இந்தப் பாடத்தில் படித்தோம். மேலும்
திரையுலகக் கவிஞர்களைப் பற்றியும் அவர்களின் நோக்கம், பணி
ஆகியவை பற்றியும் இந்தப் பாடத்தில் நாம் பார்த்தோம். தமிழ்க்
கவிதையை முழுவதுமாக அறிந்து கொள்ள இந்தப் பாடம்
உதவியது அல்லவா?

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1) புதுக்கவிதை என்றால் என்ன?
2) புதுக்கவிதையின் பாடுபொருள் எது?
3) Ôமணிக்கொடிÕ கவிஞர்கள் இருவரைக் குறிப்பிடுக.