4) குறியீடு என்பதை விளக்குக. உதாரணம் தருக.

    உவமானம் ஓர் உவமேயத்திற்குத் திரும்ப திரும்ப
ஒப்பீடாக வருவதும், ஒப்பீடு செய்கிறபோது உவமானத்தை
மட்டும் குறிப்பிட்டுவிட்டு உவமேயத்தைக் குறிப்பிடாமல்
உணர்த்துவதும் குறியீடாகும்.

    தீப மரத்தின்
    தீக்கனி உண்ண
    விட்டில் வந்தது
    கனியே
    விட்டிலை உண்டது.
(அப்துல்ரகுமான், பால்வீதி)