|
இதழ்களில் இடம் பெறும் துணுக்குகளை அடிப்படையாக
நோக்கும் போது இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
(1) கருத்துத் துணுக்கு (2) நகைச்சுவைத் துணுக்கு என்று
இவற்றைப்
பாகுபடுத்தலாம். இவை இரண்டும் பின்னிப் பிணைந்தும் இருக்க வாய்ப்பு
உண்டு. இவை இரண்டு தவிர முன்பு கண் கதைத் துணுக்கு
என்ற ஒரு
வகையினையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.
கருத்துத் துணுக்குகள் என்பவை சின்னச் சின்னதாகக்
கட்டம் கட்டிக் கூறப்படும் செய்திகள் ஆகும்.
பொதுஅறிவு,
அறிவுறுத்தல், விமர்சனம், நுணுக்கம்,
சாதனை, கிசுகிசு
ஆகியவை தொடர்பாக இத்தகைய துணுக்குகள்
அமையும்.
இதழ்களின் பக்கங்களில் ஒரு மூலையில் அல்லது கால்
பக்க, அரைப் பக்க அளவில்கூட இத்தகைய துணுக்குகள் இடம்
பெறுவதுண்டு.
 |
பொது அறிவு |
பொது அறிவுத் துணுக்குகளில் இடம் பெறுபவை புதிய
தகவலாகவும் அமைய
வேண்டும். சுவை பயக்குமாறு அவை
அளிக்கப்பட வேண்டும். கட்டம் கட்டியும், வேறுபட்ட
வண்ணங்களில் காட்டியும், கவர்ச்சியான தலைப்பை அளித்தும்
பொது அறிவுத் துணுக்குகள் அமைய வேண்டும். கருத்துத் துணுக்குகளில் பொது அறிவுத் துணுக்குகள்
நிறைய வருகின்றன.
சிறிய செய்தியைப் பளிச்சென்று இவை
கூறும். அரசியல், சமையல், இலக்கியம், தலைவர்கள்,
வரலாறு,
அறிவியல் போல் எதனையும் இத்துணுக்குத் தொட்டுச்
செல்லும்.
நாளேடுகளில் இத்தகைய துணுக்குகள் குறைவாகவும்,
வார,
மாத இதழ்களில் மிகுதியாகவும் வரும். மகளிர்
இதழ்களில்
சமையல் பற்றிய, அழகுக் கலை பற்றிய குறிப்புகள்
மிகுதியாக
வருவதையும், கல்கண்டு, முத்தாரம் போன்ற
இதழ்கள்
பொது அறிவு சார்ந்த துணுக்குகள் நிறையத்
தருவதையும்
காணலாம். இத்தகைய
துணுக்குகளுக்குத் தருகின்ற
தலைப்புகள்
மக்களை ஈர்க்கின்ற வகையில் இருக்கும். எடுத்துக்காட்டு : ‘கம கம சமையலுக்கு’, ‘விருதுக்கு விருது
தந்தவர்’ இத்தகைய தலைப்புகளோடு சில நேரங்களில் வண்ணங்கள்,
படங்களும் சேர்ந்து வரும்போது துணுக்குகள் மேலும் ஆவல்
ஊட்டுபவையாக அமைகின்றன.
 |
புதுத் தகவல்கள் |
மக்களுக்கு இதழியலில் உள்ள முக்கியமான ஈர்ப்பு
அறியாதவற்றை அறிவதற்கான
வாய்ப்பாகும். எடுத்துக்காட்டாக
உலகில் உள்ள எத்தனையோ விதமான உயிர்கள் அவற்றின்
வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பண்புகள், விந்தையான
தன்மைகள் பற்றி எல்லாருக்கும் தெரிவதில்லை. ஆனால்
அவற்றை அறிய மனிதன் விரும்புகிறான். இந்தத் தகவல்களை
ஒரு கலைக்களஞ்சியம் மூலம் அறியலாம். ஆனால் கலைக்
களஞ்சியத்தை எத்தனை பேரால் வாசிக்க முடியும்? இதழ்கள்
வாயிலாகக் கிடைக்கும் இத்தகைய புதிய தகவல்களை
அறியவே பலரும் விரும்புகின்றனர். உயிரினங்களின்
எல்லா
நடவடிக்கைகளையும் அறிய எல்லாரும் விரும்புவதில்லை.
வித்தியாசமான தகவல்களையே
புதிதாக அறிய
விரும்புகின்றனர்.
எடுத்துக்காட்டு:
| (1) |
உலகிலேயே முதல் சினிமா ஸ்கோப் படம் தி
ரோப். |
| (2) |
உலகிலேயே மிகப் பெரிய கடிகாரம்
சாம்ராட்
எந்திரம்,
ஜெய்ப்பூர். |
| (3) |
பட்டாம் பூச்சிகளின் சரணாலயம் மெக்சிகோ. |
இதுபோல் பலதுறை சார்ந்த புதிய, அதிசயத் தகவல்களும்
துணுக்குகளாகப் படிப்பவரை ஈர்க்கின்றன.
எடுத்துக்காட்டு:
கடல் இரகசியம் சூரியனுடைய சுட்டெரிக்கும் ஒளியைத் தான் வாங்கிக்
கொண்டு நம்மை உயிருடன்
வாழ வைப்பது கடல்தான்.
பூமியில்
தண்ணீரின் அளவு 70.8%. கடலுக்குள் 47,000 மைல்
நீளம்
மலைத் தொடர்கள் உள்ளன. எவரெஸ்ட் உயரமே
29829
அடிதான். ஆனால் கடலுக்கடியில் பாதாளத்தின்
ஆழம்
36,204
அடி ஆகும்.
 |
விமர்சனத் துணுக்குகள் |
விமர்சனத் துணுக்குகள் என்பவை ‘நச்’சென்று ஒரு சிறிய
விமர்சனமாக எழுதுவது ஆகும். இதுவும் அரசியல்,
பொருளியல், வரலாறு, திரைப்படம், தலைவர்கள் என்று
எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். நாளேடுகளில் இத்தகைய
விமர்சனத் துணுக்குகள் குறைவாக இருக்கும். பெண்களுக்கு,
சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு என்று, வெள்ளிக்கிழமை,
ஞாயிற்றுக்கிழமை
வெளியீடு போன்றவற்றில் இத்தகைய
துணுக்குகள் மிகுதியாக வருகின்றன.
 |
கிசுகிசுத் துணுக்குகள் |
புதிய செய்திகள், அந்தரங்கச் செய்திகள், தனிப்பட்ட
சொந்த
வாழ்க்கை பற்றிய செய்திகள் இவற்றைத் துணுக்கு
என்ற வகையில் ஊரறிய வெளியிடுவது 'கிசு
கிசுத்' துணுக்குகள்
ஆகும். சொல்லப்படும் மனிதர்களின் ஒப்புதலோ, விருப்பமோ
இல்லாமல், சொல்லப் போனால் அவர்களுக்குத் தெரியாமல்
அவர்களைப் பற்றி வெளியிடுவதே கிசுகிசுத்
துணுக்கு ஆகும்.
இது ஒரு வம்பளப்பு. திரைத்துறை, அரசியல் இவைதான் இந்த
வம்பில் மிகுதியாக
மாட்டுபவை ஆகும். கிசுகிசுத் துணுக்குகள் நாளேடுகளில் வருவதில்லை.
வந்தாலும் அவை
ஞாயிற்றுக்கிழமைச் சிறப்பிதழ்களில்தான்
மிகுதி. அத்துடன் புலனாய்வு ஏடுகளிலும் இத்துணுக்குகள்
மிகுதி. பெரிய உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கம்
எதுவும் இதில் இல்லை. பொதுவாகப் படிப்பவர் ஆவலைத்
தூண்ட
வேண்டும் என்ற நோக்கத்தோடு இதழ்களில்
துணுக்குகள்
வருகின்றன. இது ஒரு வாசகர் ஈர்ப்பு உத்தி
என்று கூறலாம்.
இவற்றின் தலைப்புகளும் கவர்ச்சிகரமாகவே
இருக்கும். கிசுகிசுத் துணுக்குகள் திரைப்படத்துறை
தொடர்பாகத்தான்
மிகுதியாக வரும். அத்தகைய துணுக்குகள்
வார இதழ்களில் மிகுதி. மேலும் திரைப்படத்துறை சார்ந்த
இதழ்களில்
இவை அதிகமாக இடம் பெறுகின்றன. பொதுவாகப்
படிப்பவர் ஆவலைத் தூண்டும் நோக்கத்தோடு இத்தகைய
துணுக்குகள் இதழ்களில் வருகின்றன. இது ஒரு விற்பனை
உத்தி என்றும் கூறலாம். |