4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  முக்கூடலில் சேரும் மூன்று ஆறுகள் யாவை?

அ) தண்பொருநை, சிற்றாறு, கோதண்ட ராம ஆறு

ஆ) பொருணையாறு, பெரியாறு, கோதண்ட ராம ஆறு

இ) பொருணையாறு, வையை, காவிரி

ஈ) தென்பெண்ணை, வையை, பாலாறு

தண்பொருநை, சிற்றாறு, கோதண்ட ராம ஆறு

2.  ஆற்றிலே வெள்ளம் என்று வரும்?

அ) நேற்று வந்தது

ஆ) இன்று வரும்

இ) நாளை வரும்

ஈ) இன்றும் நாளையும் வரும்

இ) நாளை வரும்

3.  காற்றடிப்பதால் கொம்பு என்று சுற்றியது?

அ) நேற்று மட்டும்

ஆ) இன்று மட்டும்

இ) நேற்றும் இன்றும்

ஈ) இன்றும் நாளையும்

இ) நேற்றும் இன்றும்

4.  சொறித் தவளை வாழும் நீர்நிலை எது?

அ) கேணி (கிணறு)

ஆ) குளம்

இ) ஆறு

ஈ) மணல் பாங்கான நிலப்பகுதியில்

அ) கேணி (கிணறு)

5.  வானம்பாடிகள் எதைத் தேடி ஆடிப்பாடுகின்றன?

அ) மழை தேடி

ஆ) உணவு தேடி

இ) காற்று தேடி

ஈ) வானம் தேடி

அ) மழை தேடி

6.  மழை வரும் என்பதை உணர்ந்த நண்டுகள் என்ன செய்கின்றன?

அ) வளையை விட்டு வெளியேறுகின்றன

ஆ) மீன்களை வளைக்குள் எடுத்துச் சென்று சேமிக்கின்றன

இ) மேட்டுப் பகுதியில் புதிய வளை தோண்டுகின்றன

ஈ) சேற்றால் வளையின் வாயில் பகுதியை உயர்த்தி அடைக்கின்றன

ஈ) சேற்றால் வளையின் வாயில் பகுதியை உயர்த்தி அடைக்கின்றன

7.  பண்ணை என்பது எது?

அ) நன்செய் வயல்

ஆ) புன்செய் காடு

இ) பழமரகள் அடர்ந்த காட்டுப் பகுதி

ஈ) உப்பு விளையும் கடல்

அ) நன்செய் வயல்

8.  முக்கூடலில் குடி கொண்டுள்ள இறைவன் யார்?

அ) சிவபெருமான்

ஆ) முருகப் பெருமான்

இ) ஐயனார்

ஈ) திருமால் அழகர்

ஈ) திருமால் அழகர்

9.  நண்டுகள் எங்கு வாழும்?

அ) நிலத்தில்

ஆ) நீரில்

இ) நிலத்திலும், நீரிலும்

ஈ) மலையிலும், மரத்திலும்

இ) நிலத்திலும், நீரிலும்

10.  தவளைகள் ஒன்றைஒன்று ஏன் கூப்பிடுகின்றன?

அ) காற்றடிப்பதால்

ஆ) மின்னல் மின்னுவதால்

இ) மழை வரும் என்று உணர்ந்ததால்

ஈ) வானம்பாடிகளின் இன்னிசையால்

இ) மழை வரும் என்று உணர்ந்ததால்