யாப்பு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. யாப்பு என்றாலும் -------- என்றாலும் ஒன்றே.
யாப்பு என்றாலும் செய்யுள் என்றாலும் ஒன்றே.
2. யாப்பின் உறுப்புகள் -----------.
யாப்பின் உறுப்புகள் ஆறு.
3. ‘தளை’ என்பது ----------- உறுப்புகளுள் ஒன்று.
‘தளை’ என்பது யாப்பின் உறுப்புகளுள் ஒன்று.
4. யாப்பு உறுப்புகளால் அமைக்கப் பெற்ற பாக்கள் -------- வகைபெறும்.
யாப்பு உறுப்புகளால் அமைக்கப் பெற்ற பாக்கள் நான்கு வகைபெறும்.
5. புறநானூற்றுப் பாடல்கள் யாவும் -------- வகையின.
புறநானூற்றுப் பாடல்கள் யாவும் ஆசிரியப்பா வகையின