முதல் பருவம்
நிலை - 1
7.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 7
உலகநீதி
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டா
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா
போகாத இடந்தனிலே போக வேண்டா
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டா
- உலகநாதர்