முதல் பருவம்

நிலை - 1

11.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 11

வணிக வளாகம்

வணிக வளாகம்

அண்ணன் : உங்களுக்கு என்ன வேணும்?
தம்பி : எனக்குக் கைக்கடிகாரம் வேணும்.
தங்கை : அண்ணா! எனக்குப் பட்டுப்பாவாடை வேணும்.
அண்ணன் : சரி, வாங்கலாம்.
தங்கை : அங்க என்ன விளையாடுறாங்க?
அண்ணன் : அது பௌலிங் அலே (Bowling Alley)
தங்கை : அண்ணா, நாம போய் விளையாடலாமா?
அண்ணன் : விளையாடலாமே.
தம்பி : அண்ணா, எனக்கு இந்த விளையாட்டு விளையாடத் தெரியாதே!
அண்ணன் : அப்படியா, சரி. நாம படம் பார்க்கலாமா?
தம்பி : ஆமாம் அண்ணா, நானும் அதைத்தான் நினைச்சேன்.
அண்ணன் : ஓ! மகிழ்ச்சி படமே பார்க்கலாம் வாங்க.