முதல் பருவம்

நிலை - 1

12.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 12

குரங்கு

குரங்கும் விழுதும்

கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல்
கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை யெல்லாம்,
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும

- பாரதிதாசன்