முதல் பருவம்

நிலை - 1

12.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 12

பகிர்ந்து உண்போம்

பகிர்ந்து உண்போம்

அம்மாசமைத்துக் கொண்டு இருந்தார். அங்கு வந்த சுமதி, “அம்மா, என்ன சமைக்கிறீங்க?“ என்று கேட்டாள். “வா, சுமதி, கொழுக்கட்டை செய்கிறேன். உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே“ என்றார். உடனே சுமதி, “அம்மா, என் தோழி இளமதிக்கும் கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும். அவளையும் கூட்டிட்டு வரட்டுமா?“ என்று கேட்டாள். அம்மாவும் சரி என்றார். சமையலுக்கு உதவிக்கொண்டிருந்த அப்பா, “சுமதி, மாம்பழமும் இருக்கு”, என்றார். “சரிப்பா, இளமதியையும் கூட்டிட்டு வந்துடுறேன். நாங்க சேர்ந்தே சாப்பிடுறோம்” என்று கூறினாள். தன் தோழியை அழைக்க ஓடினாள்.