முதல் பருவம்
நிலை - 1
13.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 13
சின்னஞ்சிறு கிளியே!
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே -என் முன்னே
ஆடி வரும் தேனே
- பாரதியார்