இரண்டாம் பருவம்

அகரம்

17.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 17

விளையாடு! விளையாடு!

விளையாடு விளையாடு
விரும்பி நீயும் விளையாடு
ஆடிப்பாடி விளையாடு
ஆசையாக விளையாடு
கபடி கபடி விளையாடு
கண்ணாமூச்சி விளையாடு
ஓடிப்பிடித்து விளையாடு
ஒளிந்து பிடித்து விளையாடு
பாண்டி ஆட்டம் விளையாடு
பம்பரம் சுத்தி விளையாடு
தாயம் உருட்டி விளையாடு
தாவிப் பிடித்து விளையாடு
கயிறு தாண்டி விளையாடு
கம்பு சுழற்றி விளையாடு
பச்சைக் குதிரை விளையாடு
பல்லாங்குழி விளையாடு
விளையாடு விளையாடு
விரும்பி நீயும் விளையாடு