அமுதனுக்குத் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசை. எனவே, நாள்தோறும் ஏதேனும் ஒரு சிறப்பு வகுப்பிற்குச் செல்வான். திங்கள் நீச்சல் பயிற்சி, செவ்வாய் கணினி வகுப்பு, புதன் இசை வகுப்பு, வியாழன் நடன வகுப்பு, வெள்ளி சிலம்ப வகுப்பு, சனி ஓவிய வகுப்பு என நாள்தோறும் ஒரு வகுப்பிற்குச் செல்வான். ஞாயிறு அன்று நண்பர்களுடன் விளையாடச் செல்வான். இவ்வாறு அமுதன் ஒவ்வொரு நாளும் தன் திறமைகளை வளர்த்துக் கொள்கிறான்.