இரண்டாம் பருவம்

அகரம்

19.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 19

பருவத்தே பயிர் செய்

’ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள். அதற்கேற்ப, முகிலன் ஆடி மாதத்தில் நெல்மணிகளை வயலில் விதைத்தான். ஆவணி, புரட்டாசி மாதங்களில் களைகளை நீக்கி நெற்பயிர்கள் செழித்து வளரச்செய்தான். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கிவிடாமல் பாதுகாத்தான். மார்கழி மாதம் பயிர்களை அறுவடை செய்தான். தை மாதம் புத்தரிசி எடுத்துப் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தான்.