இரண்டாம் பருவம்

அகரம்

19.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 19

நத்தை பாடல்

மழை

மின்னல் மின்னி இடித்ததே !
வீட்டில் சாரல் அடித்ததே !
சன்னல் வழியாய் நீர் புகுந்து !
தரையில் பாயை நனைத்ததே !

இருண்ட வானம் திறந்ததே !
எழுந்த கதிரும் விரிந்ததே !
இரண்டு கரையும் வெள்ளம் புரண்டே
ஏரி வந்து புகுந்ததே !

- வாணிதாசன்