இரண்டாம் பருவம்

அகரம்

20.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 20

திசைகள் அறிவோம்

காலையில் சூரியன் எழும் திசையை நோக்கி நிற்கவேண்டும். அத்திசையே கிழக்கு. பின்பு, நம் கைகள் இரண்டையும் தோள் உயரத்திற்கு விரிக்கவேண்டும். நம் வலக்கை காட்டும் திசை தெற்கு. இடக்கை காட்டும் திசை, வடக்கு. நம் பின்னால் இருக்கும் திசை, மேற்கு. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழன்று, சூரியனை வலம் வருகிறது. அதனால், சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது.