இரண்டாம் பருவம்

அகரம்

21.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 21

தமிழர் திருநாள்

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர் தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப்பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!

- பாரதிதாசன்

பொருள் அறிவோம்

தைம்மதி - தை மாதம்
செம்மை - சிறப்பு
ஏலம் - ஏலக்காய்
பண்ணிலே - பக்குவமாக
எண்ணிலே - மனத்திலே