இரண்டாம் பருவம்

அகரம்

22.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 22

உடல் நலம் பேணல்

கூழையே நீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா !
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டி விடுமப்பா
நூறு வயது தருமப்பா!

- கவிமணி தேசிக விநாயகனார்