இரண்டாம் பருவம்

அகரம்

22.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 22

பயிர்ப் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் மலைசார்ந்த பகுதியிலும் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் கம்பு, வரகு, சோளம் முதலிய சிறுதானியங்களை விதைத்தனர். அவற்றை விதைத்த பிறகு யானை, பன்றி, பறவைகள் முதலியவற்றிடமிருந்து பாதுகாக்க நினைத்தனர். விளைநிலங்களுக்கு நடுவில் பரண் வீடு கட்டினர். அதில் இருந்து கொண்டு காலையும் மாலையும் காவல் காத்தனர். இதனைத் தினைப்புனம் காத்தல் என்பர். சங்க இலக்கியத்தில் இதைப் பற்றிப் பாடல்கள் உள்ளன.