இரண்டாம் பருவம்

அகரம்

23.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 23

மலர்கள்

மலர் இன்முகம் காட்டிடுமே - அதனால்

இன்பமும் ஊட்டிடுமே.

நன்மணம் வீசிடுமே - சுற்றி

நான்கு திசைகளுமே.

வண்டுகள் தேன்விரும்பி - நாடி

வந்திடும் மொய்த்திடவே.

பாசமாய் மக்களுமே - இதனைப்

பறித்துச் சூடுவரே.

மலர் என உள்ளம் - நமக்கு

மலர வேண்டுமடி.

பலரும் போற்றிடவே - உலகில்

பண்புடன் வாழ்வோமடி.

- அழ.வள்ளியப்பா