இரண்டாம் பருவம்

அகரம்

24.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 24

ஆமையின் அறிவுரை

ஆமை : தம்பி, யார் நீ ?
சிறுவன் : என் பெயர் முகிலன்.
ஆமை : ஏன் வருத்தமாக இருக்கிறாய் ?
சிறுவன் : நான் என் நண்பனிடம் கடுமையாகப் பேசிவிட்டேன்.
ஆமை : ஏன் அப்படிப் பேசினாய்?
சிறுவன் : அவன் எப்போதும் என்னிடம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறான். அதனால்தான் அப்படிப் பேசினேன்.
ஆமை : அவ்வாறு செய்யக்கூடாது.
சிறுவன் : தெரியும். ஆனால் என்னால் சினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையே. நான் என்ன செய்யட்டும் ?
ஆமை : எனக்குத் துன்பம் வரும்போது, எனது நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்பையும் ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வேன்.
சிறுவன் : ஓ ! அப்படியா !
ஆமை : ஆமாம். நீயும் உன் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், யாருக்கும் தீங்கு நேராது. நீயும் மனவருத்தம் இன்றி இருக்கலாம்.
சிறுவன் : சரி, இனி நானும் அப்படியே செய்கிறேன். நன்றி, நான் வீட்டிற்குப் போகிறேன்.
ஆமை : உம் .. உம் .. கவனமாகச் செல்.