இரண்டாம் பருவம்

அகரம்

25.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 25

சொல் ஒன்று பொருள் இரண்டு

மாலை மாலை மாலை மாலை
மலர்கள் ஒன்றாய்ச் சேர்ந்தால் மாலை
மகிழ்வாய் ஆடும் நேரம் மாலை
ஆடு ஆடு ஆடு ஆடு
அழகுத் தமிழில் பாடி ஆடு
அங்கே புல்லை மேய்வது ஆடு
ஆறு ஆறு ஆறு ஆறு
அழகாய் தண்ணீர் ஓடிடும் ஆறு
அன்புத் தோழி வயது ஆறு

- அங்கமங்கலம் குப்பு