இரண்டாம் பருவம்

அகரம்

25.2.1 அறிவோம்

பாடம் - 25

பலசொல் ஒரு பொருள்

யானை தெருவில் வந்தது.
வாரணம் துதிக்கையைத் தூக்கியது.
வேழம் கரும்பு தின்றது.
குழந்தை பால் பருகியது.
குழவி நன்றாக உறங்கியது.
மழலை அழகாகச் சிரித்தது.
கிளி பேசியது.
தத்தை மரத்தில் அமர்ந்தது.
கிள்ளை பழம் உண்டது.
ஞாயிறு கிழக்கே உதிக்கும்.
பரிதி மேற்கே மறையும்.
கதிரவனை மேகம் மறைத்தது.