பூவே பூவே காய் தருவாய்
காயே காயே கனி தருவாய்
கனியே கனியே விதை தருவாய்
விதையே விதையே செடி தருவாய்
செடியே செடியே மரம் தருவாய்
மரமே மரமே மழை தருவாய்
மரத்தை வளர்ப்போம் மழை பெறுவோம்
மகிழ்ச்சியோடு வாழ்ந்திடுவோம்
- மு.செகசோதி