முருங்கை மரம் எல்லா வகை மண்ணிலும் வளரும். இந்த மரத்தின் இலை, பூ, காய் அனைத்துமே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. அவற்றை முருங்கை ரசம், முருங்கைக்காய்க் குழம்பு, முருங்கைக்காய்க் கூட்டு, முருங்கைப்பூப் பொரியல், முருங்கைக்கீரை அவியல் போன்ற உணவு வகைகளாகச் சமைத்து உண்ணலாம். இதன் இலைகளில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனுடைய காய்களும் இலைகளும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மைகொண்டவை. முருங்கை மரத்தை ஆங்கிலத்தில் Moringa என்பர்.