இரண்டாம் பருவம்

அகரம்

28.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 28

வீடு எங்கே ?

வண்ணக் கிளியே, வீடெங்கே ?

மரத்துப் பொந்தே என்வீடு.

தூக்கணாங் குருவி, வீடெங்கே ?

தொங்குது மரத்தில் என்வீடு.

கறுப்புக் காகமே, வீடெங்கே?

கட்டுவேன் மரத்தில் என்வீடு.

பொல்லாப் பாம்பே, வீடெங்கே?

புற்றும் புதருமே என்வீடு.

கடுகடு சிங்கமே, வீடெங்கே ?

காட்டுக் குகையே என்வீடு.

நகரும் நத்தையே, வீடெங்கே ?

நகருதே என்னுடன் என்வீடு.

- அழ.வள்ளியப்பா