|
|
அப்பா : |
டேவிட், நாம் நம் புதிய வீட்டிற்குச் சென்று வருவோமா ? |
டேவிட் : |
சரி அப்பா ! செல்வோம். |
அப்பா : |
வீடு அழகாகக் கட்டி இருக்கிறார்கள். |
டேவிட் : |
ஆமாம் அப்பா. வீட்டிற்கு வண்ணம் தீட்டினால் இன்னும்
அழகாக இருக்கும்.
|
அப்பா : |
ஜன்னல்களுக்கு என்ன வண்ணம் தீட்டலாம் ? |
டேவிட் : |
சாம்பல் வண்ணம். |
அப்பா : |
நானும் அதைத்தான் நினைத்தேன். கதவுகளுக்குக் கருநீலம்
கொடுக்கலாமா ?
|
டேவிட் : |
மிகப் பொருத்தமான வண்ணம் அப்பா ! சுவர்களுக்கு
வெள்ளை வண்ணம் தீட்டினால் பொருத்தமாக இருக்கும்.
|
அப்பா : |
அப்படியே ஆகட்டும் டேவிட். தூண்களுக்குக்கூட மஞ்சள்
நிறம் கொடுக்கலாம்.
|
டேவிட் : |
அப்படியென்றால் உட்புறச் சுவர்களுக்கு இளம்பச்சை
வண்ணம் கொடுக்கலாம்.
|
அப்பா : |
அருமை. சமையல் அறைக்கு இளஞ்சிவப்பு நன்றாக
இருக்குமா ?
|
டேவிட்: |
வேண்டாம் அப்பா. சிவப்பு நன்றாக இருக்கும். |
அப்பா: |
நல்லது டேவிட். நாளை வண்ணம் அடிப்பவரை வரவழைத்துப்
பேசிவிடலாம்.
|